பண்டாரம்பட்டி, து.நா.தி.அ.க. தொடக்கப்பள்ளியில் பணியாற்றிவரும் நல்லாசிரியர் நெல்சன் பொன்னராஜீக்கு சிறந்த ஆசிரியர்கான விருது வழங்கப்பட்டது. சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகம் மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள சிறந்த ஆசிரியர்களை கண்டறிந்து அவர்களுக்கு விருது வழங்கும் விழா வேல்ஸ் பல்கலைக்கழக சிவாலயா அரங்கில் நடைபெற்றது.
அதில் மிகச் சிறந்த 6 ஆசிரியர்களில் தூத்துக்குடி, பண்டாரம்பட்டி, து.நா.தி.அ.க. தொடக்கப்பள்ளியில் பணியாற்றிவரும் நல்லாசிரியர் நெல்சன் பொன்னராஜ் ஆவார். அவருக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் மூலம் சிறந்த ஆசிரியருக்கான விருது, சான்றிதழ் மற்றும் ரூபாய் 30,000 மதிப்புள்ள ஆண்ட்ராய்டு டேப் வழங்கப்பட்டது.
விழாவில் வேல்ஸ் நிறுவனர் டாக்டர் ஜி. கண்ணன், தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன், கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையாசிரியர் நெல்சன் பொன்னராஜுக்கு விருது வழங்கிக் கௌரவித்தார். விருது பெற்ற தலைமையாசிரியரை மாணவர்கள், முன்னாள் மாணவர்கள், ஊர் பொதுமக்கள் அனைவரும் பாராட்டினர்.
தூத்துக்குடி
பண்டாரம்பட்டியைச் சேர்ந்த ஆசிரியர் நெல்சன் பொன்னராஜுக்கு சிறந்த ஆசிரியர் விருது!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஒன்றாம் கேட் காந்தி சிலை அருகே சிறிய பூங்கா – மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!!
அடுத்த
தூத்துக்குடி தெப்பக்குளம் புது முகம் பெறுகிறது – மேயர் ஜெகன் பெரியசாமி அதிரடி ஆய்வு!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026