பாரதிய ஜனதா கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்டத் தலைவர் திரு. சரவணன் கிருஷ்ணன் அவர்களின் அறிவுறுத்தலின்படி, கட்சியின் அமைப்பு வலிமையை மேம்படுத்தும் நோக்கில் தூத்துக்குடி தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் கிளை நிர்வாகிகள் ஆய்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.


சமூக ஊடகப் பிரிவு முன்னாள் மாவட்டத் துணைத் தலைவர் திரு. கார்த்திக் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வில், கிருஷ்ணமூர்த்தி, சிவசந்தனம், மாரிமுத்து, அய்யனார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். அவர்கள் தெற்கு ஒன்றியத்தில் உள்ள பல்வேறு கிளைகளுக்கு நேரில் சென்று, கிளைத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் கலந்துரையாடினர்.


அந்தச் சந்திப்புகளின் போது, கட்சியின் வளர்ச்சிப் பணிகள், மத்திய மற்றும் மாநில அரசுகளின் மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பது, மேலும் கிளை அளவிலான செயல்பாடுகளை சீரமைத்து வலுப்படுத்துவது குறித்து விரிவான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.


இந்த ஆய்வுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி தெற்கு மண்டல் தலைவர் திரு. கேசவ செல்வன், முன்னாள் மண்டல தலைவர் திரு. எட்வர்ட் ராஜா, சக்தி கேந்திர பொறுப்பாளர் திரு. சங்கரநாராயணன் மற்றும் மண்டல பொறுப்பாளர் திரு. மாறன் சடகோபன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.