தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஒன்றியத்தின் எப்போதும் வென்றான் ஊரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஜி.எஸ்.டி (GST) வரி குறைப்பு குறித்து விளக்கப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டம் தூத்துக்குடி வடக்கு மாவட்டம், ஓட்டப்பிடாரம் வடக்கு மண்டலத்தின் தலைமையில் சிறப்பாக நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக தலைவர் சரவணா கிருஷ்ணன், மாவட்ட பொது செயலாளர் சேதுராஜ், விவசாயிகள் அணி மாவட்ட தலைவர் ஜெயகண்ணன், பிரச்சாரப் பிரிவு மாவட்டத் தலைவர் கந்தசாமி, ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய முன்னாள் தலைவர் ஜெயசங்கர், ஒன்றிய தலைவர் நாகஜோதி சிவா, இளைஞர் அணி ஒன்றிய தலைவர் பிரதீப் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் ஜி.எஸ்.டி வரி குறைப்பின் அவசியம், அதன் மூலம் சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகள் பெறும் நன்மைகள் குறித்து விளக்கப்பட்டது. மேலும், மத்திய அரசின் பொருளாதார வளர்ச்சி நடவடிக்கைகள் குறித்து பேசப்பட்டன.
நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பித்தனர்.
தூத்துக்குடி
எப்போதும் வென்றான் ஊரில் ஜி.எஸ்.டி வரி குறைப்பு குறித்து பாஜக விளக்கப் பிரச்சாரக் கூட்டம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியில் திமுகவினர் விழிப்புடன் ஈடுபட வேண்டும் – அமைச்சர் கீதாஜீவன் வலியுறுத்தல்!!
அடுத்த
புரட்சி பாரதம் கட்சியின் மாநில பொதுச் செயலாளராக டி. ருசேந்திரகுமார் நியமனம்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026