கடந்த 2023ஆம் ஆண்டு கடுமையான வெள்ளத்தால் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டன. பல ஏக்கர் விவசாய நிலங்கள் சேதமடைந்ததுடன், நூற்றுக்கணக்கான வீடுகள் அடித்து செல்லப்பட்டன. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

அந்த நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரண உதவிகளை வழங்கிய பாரதிய ஜனதா கட்சி, தற்போது வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய உறைவிடங்களை வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. ஒவ்வொரு வீடும் ரூ.7 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டிக் கொடுக்கப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தின் கால்வாய், ஸ்ரீவைகுண்டம், செம்பூர், நாணல்காடு உள்ளிட்ட பகுதிகளில் முதல் கட்டமாக வீடுகள் வழங்கப்பட இருக்கின்றன. இந்நிகழ்ச்சியில் வீடுகள் வழங்கும் பணியை பாஜக மாநில தலைவர் திரு. நைனார் நாகேந்திரன் அவர்கள் நாளை (அக்.10) நேரில் வந்து தொடங்கி வைக்கிறார்.

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட பாஜக தலைவர் திரு. சிந்தாரங்கதன் அவர்கள் தலைமையிலில் ஏற்பாடு செய்யப்பட்டு பல்வேறு பாஜக நிர்வாகிகள், பொதுமக்கள், மற்றும் பயனாளிகள் கலந்து கொள்ளவுள்ளனர். இந்த முயற்சி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய வாழ்வாதார நம்பிக்கையை ஏற்படுத்தும் ஒன்றாக அமைந்துள்ளது.