தூத்துக்குடி மாவட்டத்தில் உயர்கல்வி தொடர விரும்பும் பொருளாதாரத்தால் பின்தங்கிய மாணவர்களுக்கு உதவியாக, மாவட்ட நிர்வாகம் வங்கியாளர்களுடன் இணைந்து சிறப்பு கல்விக்கடன் வழங்கும் முகாம் நடத்துகிறது. இது வரும் 28.11.2025 காலை 10.00 மணிக்கு சுப்பையா வித்யாலயம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது.
2024–2025 கல்வியாண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து இன்ஜினியரிங், மருத்துவம், வேளாண்மை உள்ளிட்ட உயர்கல்விப் பிரிவுகளில் இந்த ஆண்டு சேர்ந்து உள்ள மாணவர்கள், மேலும் ஏற்கனவே பல்கலைக்கழகங்களில் படித்து வரும் மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.
கல்விக்கடன் பெற மாணவர்கள் கொண்டு வர வேண்டிய ஆவணங்கள்:
பான் கார்டு
ஆதார் அட்டை
வங்கி பாஸ் புக்
சமீபத்திய பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்
10ம், +1, +2 மதிப்பெண் பட்டியல்
மாற்றுச் சான்றிதழ்
சாதி சான்றிதழ்
முதல் பட்டதாரி சான்றிதழ் (தேவையுள்ளவர்களுக்கு)
உறுதிமொழி (Bonafide) சான்றிதழ்
கல்லூரி கட்டண விவரங்கள் மற்றும் கட்டண ரசீதுகள்
இணை விண்ணப்பதாரர்களாக வருகிற பெற்றோர் கொண்டு வர வேண்டியவை:
பான் கார்டு
ஆதார் அட்டை
புகைப்படம்
வங்கி கணக்கு பாஸ் புக்
வருமானச் சான்றிதழ்
மேலும் மாணவர்கள் https://pmvidyalaxmi.co.in/ இணையதளத்தின் மூலம் கல்விக்கடனுக்காக முன்பதிவு செய்யலாம்.
மத்திய/மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் கற்பிப்பு கட்டணம், சிறப்பு கட்டணம், விடுதி கட்டணம், பேருந்து கட்டணம் உள்ளிட்ட செலவுகளுக்கு இந்த கல்விக்கடனின் மூலம் உதவியை பெறலாம்.
மாணவர்களின் உயர்கல்விக்கான தடைகளை நீக்குவதில் இந்த முகாம் மிகப்பெரும் பங்காற்றும் என ஆட்சியர் க.இளம்பகவத் இ.ஆ.ப தெரிவித்தார்.
தூத்துக்குடி
ஆட்சியர் க.இளம்பகவத் அறிவிப்பு: தூத்துக்குடியில் உயர்கல்விக்கான கல்விக்கடன் முகாம் – மாணவர்களுக்கு பெரும் வாய்ப்பு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஒட்டப்பிடாரம் MLA சண்முகையா — மழைநீர் அகற்றும் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்!!
அடுத்த
தூத்துக்குடி மாப்பிளையூரணி ஊராட்சியில் மழைநீர் பிரச்சினை தீர்க்க MLA சண்முகையா அதிரடி ஆய்வு!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026