தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தின் மாப்பிளையூரணி ஊராட்சியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் ஏற்பட்ட மழைநீர் தேக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
ஆரோக்கியபுரம் தொழுநோய் மருத்துவமனையில் தேங்கியிருந்த மழைநீரை JCB மூலம் அகற்றும் பணிகளை அவர் பார்வையிட்டு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கினார்.
பாண்டியபுரம் பகுதிகளில் மின் மோட்டார் உதவியுடன் நடைபெற்று வரும் மழைநீர் வெளியேற்றப் பணிகளையும், அ.சண்முகபுரம் பகுதியில் தொடர்ந்து பெய்த மழையால் தேங்கியிருந்த இடங்களையும் நேரில் சென்று ஆய்வு செய்து, பணிகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார்.
மழைநீர் அதிகமாக தேங்கியுள்ள பகுதிகளில், உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டு குடிமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு விரைவான நிவாரண பணிகளை மேற்கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தினார்.
உடன் வட்டார வளர்ச்சி அலுவலர் ஐகோர்ட் ராஜா, உதவி பொறியாளர் ரவி, மாவட்ட சுற்றுச்சூழணி அமைப்பாளர் பொன்பாண்டி ரவி, ஒன்றிய துணைச் செயலாளர் எஸ்.ஆர். கணேசன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர், இளைஞரணி துணை அமைப்பாளர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாப்பிளையூரணி ஊராட்சியில் மழைநீர் பிரச்சினை தீர்க்க MLA சண்முகையா அதிரடி ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஆட்சியர் க.இளம்பகவத் அறிவிப்பு: தூத்துக்குடியில் உயர்கல்விக்கான கல்விக்கடன் முகாம் – மாணவர்களுக்கு பெரும் வாய்ப்பு!!
அடுத்த
“கிரிக்கெட் வீரர்களுக்கு சீருடை வழங்கி ஊக்கமளித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்”
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026