தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டி மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பள்ளியை தனியார் வசம் ஒப்படைப்பதை கண்டித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் குடும்பத்தோடு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாற்றுத்திறனாளிகள்துறை ஊழல் பெரிச்சாளி அதிகாரிகளின் பேச்சை கேட்டு 22 வருடங்களாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடத்தப்படும் தூத்துக்குடி & கோவில்பட்டி மனவளர்ச்சிக்குன்றிய குழந்தைகளுக்கான வித்யா பிரகாசம் சிறப்பு பள்ளிகளை ஆர்.எஸ்.எஸ் தொடர்புடைய தனியார் நிறுவனத்திடம் ஒப்படைப்பதை கண்டித்தும்,

தற்போதைய ஆட்சியர் வந்ததிலிருந்து இந்த ஊழல் அதிகாரிகளின் பேச்சைக்கேட்டு நிறுத்தப்பட்ட சிறப்பு குழந்தைகளுக்கான பள்ளி வாகனத்தை மீண்டும் இயக்கு!

பணியிலிருந்து நிறுத்தப்பட்ட ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்ந்து!

சிறப்பு ஆசிரியர்களுக்கு தற்போதைய ஆட்சியாளரால் குறைக்கப்பட்ட ஊதியத்தை உயர்த்தி வழங்கு!

உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்டத் தலைவர் கே.பி. கண்ணன், மாவட்டத் துணைத் தலைவர் சாலமன் ராஜ் ஆகியோர் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் குடும்பத்தோடு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

மாவட்ட செயலாளர் ஜெபஸ்டின் ராஜ் மாவட்ட பொருளாளர் கிருஷ்ணகுமார் செயல் தலைவர் என்.பி.ஆர்.டி நம்புராஜன், மாநில தலைவர் (TARATDAC) வில்சன் உட்பட போராட்டத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் தூத்துக்குடி மாவட்ட குழு நிர்வாகிகள் பெற்றோர்கள் மாணவ மாணவிகள் பலர் திரளானோர் கலந்து கொண்டனர்.

ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்துவதற்கு காவல் துறை அனுமதி மறுத்த நிலையில் காவல்துறைக்கும் , மாற்றுத்திறனாளிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து திடீரென மாற்றுத்திறனாளிகள் குடும்பத்தோடு தரையில் அமர்ந்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராக தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.