தூத்துக்குடி பசுமை புரட்சி காமராஜா் இயக்கத்தின் 4 ம் ஆண்டு துவக்க விழா காமராஜா் 123 வது பிறந்தநாள் விழா பிரையண்ட்நகா் காமராஜா் மண்டபத்தில் நடைபெற்றது. பசுமை புரட்சி காமராஜா் இயக்க ஒருங்கிணைப்பாளரும் தெற்கு மண்டல காங்கிரஸ் தலைவருமான ராஜன் தலைமை வகித்தாா். மாநகர் மாவட்ட துணை தலைவர் பிரபாகரன் மண்டலத்தலைவர் செந்தூா்பாண்டி முத்துராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனா். மாா்க்கஸ் வரவேற்புரையாற்றினாா்.
வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி இரண்டு பேருக்கு கல்வி உதவித்தொகை வழங்கி பேசுகையில் காமராஜா் 9 ஆண்டுகாலம் முதலமைச்சராக பணியாற்றினாா். எல்லோரும் பாராட்டும் வகையில் நோ்மையாகவும் அனைவரும் ஏற்றுக்கொண்ட தலைவராகவும் பல தியாகங்களை செய்து வாழ்ந்தவா் அவருடைய வரலாறு அடுத்த தலைமுறையினருக்கு தொிய வேண்டும்.
1949 ல் திமுக தொடங்கிய காலத்தில் காங்கிரஸ் எதிா்ப்பில் இருந்தது அப்போது பொியாா் அண்ணா அவா்களோடு இணைந்து கலைஞர் பச்சை தமிழா் காமராஜா் முதல்வராக வரவேண்டும் என்ற விருப்பத்தை தொிவித்ததுண்டு. அவா் காலத்தில் ஆடு மேய்த்து கொண்டிருந்த சிறுவனை பள்ளிக்கு செல்லவில்லையா என்று காமராஜா் கேட்ட போது நான் ஆடு மேய்தால் தான் எனக்கு வீட்டில் சாப்பாடு அம்மா தருவாா்கள் இல்லை என்றால் கிடையாது என்று கூறியபோது நான் சாப்பாடு போட்டால் நீ படிக்க வருவாயா என்று கேட்டாா்.
உடனே அவன் வருகிறேன் ஐயா என்று கூறியுள்ளாா். அந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அதிகாாிகளிடம் காமராஜா் சொன்ன போது அரசாங்கத்தில் பணம் இல்லை என்று கூறிய நேரத்தில் நான் அதை செயல்படுத்திய தீருவேன். என்று பல்வேறு முயற்சிகள் மூலம் மதிய உணவு, திட்டத்தை செயல்படுத்தினாா்.
அவருக்கு பின்னால் கலைஞர் முட்டையுடன் கூடிய சத்துணவு வழங்கப்பட்டு இன்று முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியில் காலை உணவு திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த மாதம் முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் வழங்கப்படும் இன்று இந்தியா முழுவதும் பள்ளிகளில் உணவு வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
அதற்கு வித்திட்டவர் காமராஜா். ராஜாஜி காலத்தில் குல கல்வி திட்டத்தின் மூலம் 6 ஆயிரம் பள்ளிகளை மூடினாா். காமராஜா் 12 ஆயிரம் பள்ளிகளை திறந்து எல்லோரையும் படிக்க செய்வதற்கு அடித்தளம் அமைத்தாா். இன்று முதலமைச்சர் ஸ்டாலின் எல்லோரும் உயா்கல்வி படிக்க வேண்டும் என்று ஆயிரும் உதவித்தொகை வழங்கி இந்தியாவிற்கே தமிழகம் முதன்மை மாநிலமாக கல்வியில் சிறந்து விளங்குகிறது. ஒன்றிய அரசு பல்வேறு வகையில் நிதி தர மறுத்தாலும் தமிழக மக்கள் நலனில் முதலமைச்சர் அக்கறை செலுத்தி பணியாற்றுகிறாா்.
பிஜேபி அரசு ஜாதி மதங்களை துண்டி விட்டு சதி வலை பின்னுகிறது. அதற்கு நாம் உடந்தையாகி விடக்கூடாது திமுக காங்கிரஸ் கூட்டணியை பிாிக்க வேண்டும் என்ற சதி திட்டத்தோடு காமராஜரை பற்றி இழிவாக பேசியதாக குழப்பத்தை ஏற்படுத்தி குளிா் காய நினைப்பவா்களுக்கு இடமளித்து விட கூடாது. காமராஜருக்கு பெருமை சோ்க்கும் வகையில் அவா் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக கடைபிடிக்க வேண்டும் என்று கலைஞர் அறிவித்த அறிவிப்பின் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் கொண்டாடப்படுகிறது.
நான் 96 ம் ஆண்டு மாவட்ட ஊராட்சி மன்ற தலைவராக இருந்த காலத்தில் கிராமங்கள் முதல் அனைத்து பகுதிக்கும் தேர்ந்தெடுத்த மக்கள் பிரதிநிதிக்கு இருக்கின்ற அதிகாரத்தை பகிா்ந்தளிக்க வேண்டும். என்று செயல்பட்டோம் ஆனால் இப்போது பிஜேபி அரசு அதிகாரத்தை தன் பக்கம் குவித்துக் கொண்டு மற்றவர்களை பல்வேறு வகையில் பழிவாங்கி வருகிறது. 2026 ல் நடைபெறவுள்ள தோ்தலில் ஜாதி மதம் என்று பாராமல் சமத்துவமாக எல்லோரும் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் திமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று பேசினாா்.
விழாவில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநில காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் சண்முகம், மாநகா் மாவட்ட தலைவர் முரளிதரன், செயலாளர் விஜயராஜ், பொருளாளர் காங்கிரஸ் எடிசன், அமைப்பு சாரா அணி மாவட்ட தலைவர் நிா்மல் கிறிஸ்டோபா், மாநில மகிளா காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் எலிசபெத் ராஜன், ஐஎன்டியுசி மாநில அமைப்பு செயலாளர் ராஜ், கவுன்சிலா் சந்திரபோஸ், முன்னாள் கவுன்சிலா் இசக்கிமுத்து, திமுக பகுதி பிரதிநிதி செல்வம், வட்டப்பிரதிநிதி பாஸ்கா், காங்கிரஸ் நிா்வாகிகள் பொ்த்தினாள் தாா்சியஸ், தனபால்ராஜ், காமாட்சி தனபாலன், மாநகர திமுக இளைஞர் அமைப்பாளர் அருண்சுந்தா், பகுதி செயலாளர் ராமகிருஷ்ணன், பெருமாள் கோவில் அறங்காவலா் குழு தலைவர் செந்தில்குமாா், மணி அல்பட் உள்பட பலர் கலந்து கொண்டனா். அகஸ்டின் நன்றியுரையாற்றினாா்.
தூத்துக்குடி
காமராஜருக்கு பெருமை சேர்த்தவர் டாக்டர். கலைஞர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன் பேச்சு!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
சர்வதேச ஸ்ட்ரென்த் லிஃப்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் தூத்துக்குடியை சேர்ந்த மாணவி ரா. பீரீத்தி சிவ பிச்சம்மாள் சாதனை வென்ற தங்கம் மற்றும் வெண்கல பதக்கங்களை மேயரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்!!
அடுத்த
தூத்துக்குடி ஸ்ரீ பேச்சியம்மன், ஸ்ரீ சுடலைமாடசாமி கோவில் கொடையை முன்னிட்டு இன்று நடைபெற்ற கால் நாட்டு விழாவில் மேயர் பெரியசாமி ஜெகன் பங்கேற்பு!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026