தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச ஸ்ட்ரென்த் லிஃப்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் தூத்துக்குடியை சேர்ந்த மாணவி ரா. பீரீத்தி சிவ பிச்சம்மாள் மூன்று தங்கம் மற்றும் ஒரு வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

போட்டிகளில் கலந்து கொண்டு சாதனை புரிந்து வென்ற பதக்கங்களோடு தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது மேயர் இதுபோலவே பல போட்டிகளில் கலந்து கொண்டு நம்ம தூத்துக்குடிக்கும் தமிழ்நாட்டிற்கும் இந்திய திருநாட்டிற்கும் பெருமைகள் பல சேர்க்க வேண்டும் என மேயர் ஜெகன் பெரியசாமி வாழ்த்தினார்.
நிகழ்ச்சியில் வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், தமிழ்நாடு காது கேளாதோர் சங்கத்தின் துணை தலைவர் மெய்கண்டன் உட்பட பலர் உடன் இருந்தனர்.
