தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் கரிக்களம் பகுதியில் உள்ள ஸ்ரீ முனீஸ்வரர் – ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தின் கொடை விழாவை முன்னிட்டு நடைபெற்ற அன்னதான நிகழ்வை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் அமைச்சர் கீதாஜீவன் முதலில் ஆலயத்துக்குள் சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் பக்தர்கள் நலனை விரும்பி சிறப்புப் பிரார்த்தனையும் நிகழ்த்தினார். அதன் பின் பக்தர்களுக்கான அன்னதானத்தை துவக்கி வைத்து மக்களுடன் இணைந்து உணவு வழங்கினார்.

நிகழ்வில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி மண்டலத் தலைவர் நிர்மல்ராஜ், வட்டச் செயலாளர் பொன்னுச்சாமி, வட்டப் பிரதிநிதி பாஸ்கர், முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் செந்தில்குமார், மற்றும் கோவில் நிர்வாகிகள் மணி, கமலி, டோலி, அல்பட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கரிக்களம் பகுதி பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டு அன்னதானத்தில் பங்கேற்று ஆனந்தம் அடைந்தனர்.