தூத்துக்குடி பனிமய மாதா கோவில் திருவிழா சிறப்பாக நடைபெறும் நன்னாளில் கடந்த (19.07.2025) அன்று கழக வர்த்தக அணி சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் "மக்களைக் காப் போம், தமிழகத்தை மீட்போம்" என்ற உன்னத லட்சியத் தோடு, 2026 ம் ஆண்டின் தேர்தல் எழுச்சி பயணமாக‌

தூத்துக்குடிக்கு ஆகஸ்ட் 1 ம் தேதி வருகை தரும் கழக பொதுச் செயலாளர் முன்னாள் முதல்வர் எடப்பாடியாரை பனிமய மாதா கோவிலுக்கு அழைத்து சென்று வழிபட ஏற்பாடுகள் செய்யப்படும்  என்று முடிவு செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து இன்று கழக வர்த்தக அணி செயலாளர் முன்னாள் அமைச்சர் சி.த‌. செல்லப்பாண்டியன் பனிமய மாதா பங்குத்தந்தை ஸ்டார்வினை மரியாதை நிமித்தமாக சந்தித்து எடப்பாடியார் வரும் தகவலை தெரிவித்த பின்னர் ஆசிகள் பெற்றார். அப்போது பங்கு தந்தை அன்னையை வழிபட வருமாறு, மாநில வர்த்தக அணி செயலாளர் சி.த. செல்லப்பாண்டியன் மூலம் இ.பி.எஸ்.சிற்கு அழைப்பு விடுத்தார்.

இந்த நிகழ்வின் போது பேராலய மேய்ப்புப் பணிக்குழுவின் செயலாளர் முன்னாள் மத்திய கூட்டுறவு பண்டகசாலை தலைவர் எட்வின் பாண்டியன் Ex.M.C மாவட்ட துணைச் செயலாளர் செரினா பாக்யராஜ் தூத்துக்குடி வடக்கு மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் M.C.P. ஜீவா பாண்டியன் தூத்துக்குடி மாவட்ட  மீனவணி துணை தலைவர் டெலஸ்பர் அண்ணா தொழிற்சங்க மாவட்ட துணைச் செயலாளர் ரயில்வே மாரியப்பன் முன்னாள் நகர் மன்ற தலைவர் விசைப்படகு உரிமையாளர் சங்க தலைவர் மனோஜ் Ex. தூத்துக்குடி மாவட்ட மீனவரணி செயலாளர் மீனவர் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் அகஸ்டின் Ex.MC, Ex. மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் சகாயராஜ் Ex.M.C
தூத்துக்குடி மாவட்ட முன்னாள் மீனவரணி இணைச் செயலாளர் ஜோசப் முன்னாள் தொகுதி கழகச் செயலாளர் ஞாயம் ரொமால்ட் மத்திய வடக்கு பகுதி சிறுபான்மை பிரிவு செயலாளர் அசன் வட்ட செயலாளர்கள் லயன்ஸ் டவுன் சகாயராஜ் ஜெனோபர் விசைப்படகு உரிமையாளர் சங்க நிர்வாகி வட்ட பிரதிநிதி பெவின் வட்ட பிரதிநிதிகள் P.M.S. செல்வராஜ் அசோகன் சிறுபான்மை பிரிவு அனிஸ்டஸ் மோதிரம் ஜேசுராஜ் அரசு போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள் டெரன்ஸ் பெலிக்ஸ் சகாயராஜ் சங்கர் பேச்சியப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.