கல்வி கடவுள் காமராஜரை இழிவுபடுத்தி பேசிய திருச்சி சிவாவை கண்டித்து தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் சார்பில் தூத்துக்குடி சிதம்பர நகர் பஸ் ஸ்டாப் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு மாநில ஐ.என்.டி.யூ.சி பொதுச் செயலாளர், காங்கிரஸ் கட்சி மாநில பொது குழு உறுப்பினர், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் K. பெருமாள் சாமி அவர்கள் தலைமை தாங்கினார்.
அகில இந்திய ஒர்க்கர்ஸ் கமிட்டி தூத்துக்குடி மாவட்ட தலைவர் ஜெயக்கொடி மற்றும் சாத்தான்குளம் முன்னாள் வட்டார தலைவர் ஜனார்த்தனன் வடக்கு மாவட்ட விவசாய பிரிவு தலைவர் பேரையா மீனவர் அணி மிக்கேல் குரூஸ் மாவட்ட பொது செயலாளர் இக்னேஷியஸ், FCI INTUC தலைவர் வீரையா, மாநில பேச்சாளர் பார்த்திபன் தெற்கு மண்டல தலைவர் தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
இந்நிகழ்ச்சியில் ஆராய்ச்சி துறை ஆடிட்டர் சிவராஜ் மோகன், எஸ்.சி எஸ்.டி பிரிவு முன்னாள் மாவட்ட தலைவர் ராஜாராம், ஊடகப் பிரிவு சுந்தர்ராஜ், ஆத்தூர் ராம்குமார், சம்சுதீன், வடக்கு மாவட்ட ஊடகத்துறை ஜேம்ஸ் லாரன்ஸ், ஓட்டப்பிடாரம் ஆராய்ச்சித்துறை ஹரி பாலகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் அமைப்புசாரா தொழிலாளர் நலத்துறை ராமர், புதியம்புத்தூர் நகர செயலாளர் சின்னச்சாமி, புதியம்புத்தூர் நகரத் தலைவர் துரைமணி, வழக்கறிஞர் செல்வம், செல்வ முருகன், அல்போன்ஸ், சேகர், ஜான்வெஸ்லி வாசிராஜன் சுரேஷ்குமார், சேவியர் மிஷியர், மனுவேல், முருகேசன், கன்னிச்சாமி பாண்டியன், ரூஸ்வெல்ட், பிரைன் நாத், ஒர்க்கர்ஸ் கமிட்டி மாவட்ட தலைவி உமா மகேஸ்வரி மாவட்ட செயலாளர் தனலட்சுமி இருவர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட மகிளா காங்கிரஸ் சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர் மற்றும் INTUC சார்ந்த சிவலிங்கம் சாரதி முத்து ரமேஷ் பாலன் கிரிதரன் தலைமையில் தேசிய தோழர்கள் கலந்து கொண்டனர் ஒர்க்கர்ஸ் கமிட்டியை சார்ந்த அசன் நன்றியுரை ஆற்றினார்.
