தூத்துக்குடி முள்ளக்காடு பகுதியில் செப்டம்பர் 21, 2025 (ஞாயிற்றுக்கிழமை) இன்று இலவச கண் பரிசோதனை முகாம் சிறப்பாக நடைபெற்றது.
இந்த முகாம், என்.எல்.சி. தமிழ்நாடு பவர் லிமிடெட் – தூத்துக்குடி, தூத்துக்குடி புனித மரியன்னை கல்லூரி சமுதாய மேம்பாட்டுத் திடம், உன்னத் பாரத் அபியான் அமைப்பு சார்பாக இரண்டாம் ஆண்டு இளங்கலை உளவியல் துறை மாணவியர் மற்றும் திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டது.
முள்ளக்காடு ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நடைபெற்ற இந்த முகாமை, என்.எல்.சி. தமிழ்நாடு பவர் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி K. அனந்த ராமனுஜம் மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர் அருட்சகோதரி ஜெஸி அவர்கள் இணைந்து துவக்கி வைத்தார்கள்.
முகாமில் கண்பார்வை குறைபாடுகள், கண்ணழுத்த நோய், மூப்புக் கண்படல நோய் உள்ளிட்ட பல்வேறு கண் நோய்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. தேவையுடைய நோயாளிகளுக்கு இலவசமாக கண் கண்ணாடி, அறுவை சிகிச்சை மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டன. மேலும், கண் பராமரிப்பு மற்றும் சிகிச்சை தொடர்பான விழிப்புணர்வும் மருத்துவர்களால் அளிக்கப்பட்டது.
சுமார் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு இந்த முகாமில் பயன்பெற்றனர்.
தூத்துக்குடி
முள்ளக்காட்டில் இலவச கண் பரிசோதனை முகாம் – நூற்றுக்கணக்கானோர் பயன்பெற்றனர்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
லயன் மருதப்பெருமாள் பங்கேற்ற “தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன்” உறுதிமொழி கூட்டம் தூத்துக்குடியில் கோலாகலம்!!
அடுத்த
ஊட்டச்சத்து உணவு விழிப்புணர்வு நிகழ்ச்சி – அறம் 1 செய்வோம் அறக்கட்டளை சார்பில் சிறப்பாக நடைபெற்றது!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026