தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட திரேஸ்புரம் பகுதியிலுள்ள முகத்துவாரத்தில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளையும் மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனுடன், லயன்ஸ் டவுன் பகுதியில் இருந்து உப்பாற்று ஓடை வரை மழைநீர் சீராக வெளியேறுவதற்காக அமைக்கப்பட்டுள்ள தற்காலிக வடிகாலின் வழியாக நீர் பாய்வதையும் பரிசோதனை செய்தார்.
மழையால் நகரில் நீர் தேக்கம் ஏற்படாதவாறு மாநகராட்சி நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக மேயர் தெரிவித்தார். பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் மழைநீர் வடிகால் பணிகள் முழு திறனுடன் நடைபெறுவதை உறுதிசெய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இந்த ஆய்வில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா இ.ஆ.ப, துணை மேயர் ஜெனிட்டா, மாமன்ற உறுப்பினர் ரெக்ஸ்லின், மாநகர மீனவரணி அமைப்பாளர் டேனி ஆகியோர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
திரேஸ்புரம் முதல் உப்பாற்று வரை – மழைநீர் வெளியேற்றம் கண்காணித்த மேயர் ஜெகன் பெரியசாமி!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர் நிலங்கள் – நேரில் ஆய்வு செய்த ஒட்டப்பிடாரம் எம்.எல்.ஏ சண்முகையா!!
அடுத்த
“புகார் சொன்னால் உடனடி தீர்வு — தூத்துக்குடி மாநகரில் மேயர் ஜெகன் உறுதி!”
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026