ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்தின் பக்கபட்டி மற்றும் சென்னல்பட்டி கிராமங்களில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் விவசாய நிலங்கள் வெள்ளநீரில் மூழ்கின. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் கடுமையாக சேதமடைந்தன.
இந்த நிலையில், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா அவர்கள் வேளாண்மை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் சேர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று நேரில் ஆய்வு செய்தார். தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்களின் சேதத்தை அதிகாரிகளிடம் காண்பித்து, விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு மற்றும் காப்பீட்டுத் தொகை விரைவில் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்த ஆய்வில் வேளாண்மை துறை இணை இயக்குனர் பெரியசாமி, உதவி இயக்குனர் ஏஞ்சலின், உதவி வேளாண்மை அலுவலர் செல்வசுந்தரம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆறுமுகராஜா நயினார், ஜான்சிராணி, வருவாய் ஆய்வாளர் மாதவன், கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்குமார், கருங்குளம் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் ராமசாமி, ஒன்றிய துணைச் செயலாளர் முருகன், அயலக அணி சஞ்சய், ஊராட்சி செயலாளர் சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விவசாயிகளின் நலனை உறுதிப்படுத்தும் வகையில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று எம்.எல்.ஏ சண்முகையா தெரிவித்தார்.
தூத்துக்குடி
மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர் நிலங்கள் – நேரில் ஆய்வு செய்த ஒட்டப்பிடாரம் எம்.எல்.ஏ சண்முகையா!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் கிழக்கு மண்டல அலுவலக முகாம் – மக்களின் கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு!!
அடுத்த
திரேஸ்புரம் முதல் உப்பாற்று வரை – மழைநீர் வெளியேற்றம் கண்காணித்த மேயர் ஜெகன் பெரியசாமி!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026