அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) தொடங்கியதன் 54-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி தூத்துக்குடியில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
1972ஆம் ஆண்டு எம்ஜிஆர் அண்ணா உருவம் பொறித்த கொடியை அறிமுகப்படுத்தி, தமிழகத்தில் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களுக்காக வாழ்நாள் முழுவதும் பணியாற்றியவர் எம்ஜிஆர். அவர் மறைவிற்குப் பிறகு, ஜெயலலிதா அதிமுக பொதுச்செயலாளராகவும், தமிழக முதலமைச்சராகவும் இருந்து கட்சியை ராணுவ ஒழுங்குடன் வழிநடத்தி தனித்துவமான முத்திரை பதித்தார்.
பின்னர் 3ஆம் தலைமுறையாக எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கட்சி வளர்ச்சி பெற்று, 4½ ஆண்டுகள் தமிழக முதலமைச்சராக பணியாற்றி தற்போது அதிமுக பொதுச்செயலாளராக கட்சியை முன்னேற்றி வருகிறார்.
அவரது அறிவுறுத்தலின்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் மாநில வர்த்தகஅணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
பின்னர் தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மீண்டும் தமிழகத்தில் நல்லாட்சி ஏற்படுத்த உறுதிமொழி எடுக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாநில வர்த்தகஅணி துணைச்செயலாளர் மில்லை ராஜா, தெற்கு மாவட்ட துணைச்செயலாளர் சந்தனம், மாவட்ட வழக்கறிஞரணி செயலாளர் சேகர், எம்ஜிஆர் மன்ற துணைச்செயலாளர் ஜோதிமணி, முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், மொத்த கூட்டுறவு பண்டகசாலை தலைவர் எட்வின்பாண்டியன், முன்னாள் நகர்மன்ற தலைவர் மனோஜ்குமார், துணைத்தலைவர் ரத்தினம், மாவட்ட மகளிரணி துணைச்செயலாளர் சண்முகத்தாய் உள்ளிட்டோர் மற்றும் ஜோசப், சங்கர், அபுதாகீர், கோட்டளமுத்து, ராஜசேகர், டெலஸ்பர், மாரியப்பன், சந்திரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
எம்ஜிஆர் வழியில் மீண்டும் நல்லாட்சி — தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் மரியாதை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை, இனிப்பு வழங்கி தீபாவளி மகிழ்ச்சி பகிர்வு!!
அடுத்த
தூத்துக்குடியில் அதிமுக 54-வது ஆண்டு விழா – முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026