தூத்துக்குடி மாநகராட்சி 3வது வார்டு சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை மற்றும் இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி உற்சாகமாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி தூத்துக்குடி எட்டையாபுரம் ரோட்டில் உள்ள வெங்கடேஸ்வரா டீ ஸ்டால் எதிரே நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திமுக தெற்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர், மாநகராட்சி கணக்குக் குழு தலைவர் மற்றும் 3வது வார்டு கவுன்சிலர் ரெங்கசாமி செய்து இருந்தார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை மற்றும் இனிப்பு வழங்கி தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்தார்.
ஜெகன் பெரியசாமி தனது உரையில், “நகரத்தின் தூய்மைக்கும் நலத்திற்கும் தினமும் கடினமாக உழைக்கும் தூய்மை பணியாளர்களே மாநகரத்தின் உண்மையான பெருமை. அவர்களின் சேவையை மதிப்பதற்காக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்வதே நகரத்தின் முன்னேற்றம்,” என்று கூறினார்.
நிகழ்ச்சியில் அவைத் தலைவர் ராஜசேகர், தொமுசு கே. முத்துராஜ், இ.பி. செல்வராஜ், மக்புல் பாட்ஷா, நயினார், சுடலை, டி. பாலு, ஜவகர், பால்ராஜ் ராஜாமணி, அண்ணாதுரை, சங்கர நயினார், சங்கர சுப்பிரமணியன், கே.டி.சி. சண்முகவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பணியாளர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
தூய்மை பணியாளர்கள் புத்தாடை மற்றும் இனிப்புகளை பெற்றுக்கொண்டு மகிழ்ச்சியடைந்தனர். தீபாவளியை முன்னிட்டு அன்பும் மனிதநேயமும் நிறைந்த இந்நிகழ்ச்சி அனைவரிடமும் பாராட்டை பெற்றது.
தூத்துக்குடி
மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை, இனிப்பு வழங்கி தீபாவளி மகிழ்ச்சி பகிர்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மழைநீர் சிக்கல் தீர்க்க தூத்துக்குடி வந்தடைந்த அமைச்சர் கீதாஜீவன் — மழைநீர் தேங்கிய பகுதிகளில் துரித ஆய்வு!
அடுத்த
எம்ஜிஆர் வழியில் மீண்டும் நல்லாட்சி — தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் மரியாதை!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026