சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நாகலாந்து ஆளுநர் இல. கணேசன் காலமானார். இதனை தொடர்ந்து இல. கணேசனுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் நாகலாந்து மாநில ஆளுநரும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான ஐயா இல. கணேசன் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த துயரத்தை அளிப்பதாகவும்,
"பெரும் மதிப்பிற்குரிய மரியாதைக்குரிய அன்பு உள்ளம் கொண்ட தலைவரை இழந்தது மிகுந்த இழப்பாகும்" என்று அவர் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
