தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சார்பில், தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்கும் நோக்கில், ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இணைந்துள்ள ஒரு கோடிக்கும் மேற்பட்ட குடும்பத்தால் முன்மொழியப்பட்ட “தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்” என்ற தீர்மானத்தை ஏற்று உறுதிமொழி பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த பொதுக்கூட்டம் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சருமான அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் தலைமையில், ஒன்றிய செயலாளர்கள் பாலசிங், இளங்கோ, ரமேஷ், நவீன்குமார், சதீஸ்குமார், நகர செயலாளர்கள் சுடலை, முத்து முகமது, பேரூராட்சி மன்றத் தலைவர் ஹூமைரா ரமீஷ் பாத்திமா அசாப், பேரூர் செயலாளர் ராஜேஷ் உள்ளிட்டோர் முன்னிலையில் உடன்குடி பஜார் அண்ணா திடலில் நடைபெற்றது.

திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி, அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் என்ற உறுதிமொழியை ஏற்றனர்.

பொதுக்கூட்டத்தில் கனிமொழி எம்.பி ஆவேசமாக உரையாற்றியதாவது:
“தமிழகத்தை தலைகுனிய விடமாட்டோம் என்ற உறுதிமொழியை நாம் எடுத்துள்ளோம். ஒன்றிய அரசு கல்விக்கான நிதி உரிமை உள்ளிட்ட தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய பல்வேறு உரிமைகளை மறுக்கிறது. பெண்கள், விவசாயிகள், மீனவர்கள் ஆகியோருக்கான உரிமை, நிதி ஆகியவற்றை பெற தொடர்ந்து போராடுவோம்.

ஆட்சி பொறுப்பேற்ற தினம் முதல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த உறுதிமொழிக்காகவே போராடி வருகிறார். ஆனால் பிரதமர் மோடி வெளிநாடுகளைச் சுற்றியும், எந்த நாட்டுடனும் நல்லுறவு வைத்துக் கொள்ளவில்லை. நேபாளம், சீனா, இலங்கை போன்ற நாடுகளோடு உறவு பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து செல்லும் பொருட்களுக்கு 50% வரி விதித்ததால், ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாடுகளில் முதலீடுகளை கொண்டு வருகிறார். ஆனால் மோடி எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை. இந்த நாட்டை வழிநடத்திக் கொண்டிருப்பது தமிழ்நாடு தான் என்ற பெருமையோடு இன்று நாமிருக்கிறோம்.

பெண்களுக்காக விடியல் பயணம், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. உழைக்கும் பெண்கள் அதிகமாக உள்ள மாநிலம் தமிழ்நாடு என்பது பெருமை.

ஆனால், தமிழகத்திற்கு துரோகம் செய்து வரும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ளது. அதிமுக அலுவலகமே இப்போது டெல்லியில் உள்ள அமித்ஷா வீட்டில் செயல்படுகிறது. ஒன்றிய அரசு தொடர்ந்து தமிழர்களின் உரிமைகளை பறிக்க முயற்சிக்கிறது. கீழடி, ஆதிச்சநல்லூரில் நடக்கும் அகழ்வாராய்ச்சி குறித்து மௌனம் காப்பது அதற்கு எடுத்துக்காட்டு.

தமிழகத்தின் எதிர்காலத்திற்காக விழிப்புணர்வுடன் வாக்களிக்க வேண்டும். மீண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி மலரும். தமிழ்நாடு தலை நிமிர வைக்கும் ஆட்சியாக இருக்கும்,” என்றார் கனிமொழி.

பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சண்முகையா எம்.எல்.ஏ, மேயர் ஜெகன் பெரியசாமி, மாநில வர்த்தக அணி இணை செயலாளர் உமரிசங்கர், மாநில மகளிர் அணி பிரச்சாரக் குழு செயலாளர் ஜெஸ்சி பொன்ராணி, மருத்துவ அணி துணைச் செயலாளர் வெற்றிவேல், மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம், துணை செயலாளர்கள் ஜெயக்குமார் ரூபன், ஆறுமுக பெருமாள், ஜெபதங்கம் பிரேமா, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செந்தூர்மணி, மாடசாமி, பிரம்மசக்தி, பொதுக்குழு உறுப்பினர்கள் சொர்ணகுமார், முத்துச்செல்வன், இந்திராகாசி, சாகுல்ஹமீது, ஆறுமுகபாண்டியன், ராஜலட்சுமி, மாவட்ட அணி அமைப்பாளர்கள் ராமஜெயம், சுரேஷ், வீரபாகு, செல்வபெருமாள், செல்வகுமார், ரகுராமன், சாரதா பொன்இசக்கி, தயாநிதி பாண்டியன், ராமசாமி, ரெங்கநாதன், சுகு பேரின்ப ராஜ் லாசரஸ், ரவி @ பொண்பாண்டி, ஆனந்த், சுரேஷ்குமார், அணி துணை அமைப்பாளர்கள் வக்கீல் பால்துரை, ஸ்டாலின், அந்தோணி தனுஷ்பாலன், ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்கொடி, புதூர் சுப்பிரமணியன், இளையராஜா, சரவணக்குமார், ராமசாமி, சுரேஷ்காந்தி, கொம்பையா, ரவி, ஜோசப், பார்த்திபன், கோட்டாளம், துணைச்செயலாளர்கள் கணேசன், ஹரிபாலகிருஷ்ணன், நாராயணன், பகுதி செயலாளர்கள் சிவக்குமார், ஆஸ்கர், பேரூர் செயலாளர்கள் இளங்கோ, ராயப்பன், சுப்புராஜ், நவநீத முத்துக்குமார், கண்ணன், கோபிநாத், ராமஜெயம், முத்துவீரபெருமாள், ஜமீன் சாலமோன், மால்ராஜேஷ், முருகானந்தம், நவநீதபாண்டியன், மாநகராட்சி கணக்கு குழு தலைவர் ரெங்கசாமி, மாவட்ட பிரதிநிதி பூபேஸ்நாதன், ஒன்றிய துணைச்செயலாளர்கள் நாராயணன், ஹரி பாலகிருஷ்ணன், சண்முகராஜ், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர் பொன்னரசு, கபடி கந்தன், வக்கீல் கிருபாகரன், பாரதிராஜா, கப்பிகுளம் பாபு மற்றும் பல்வேறு அணியை சேர்ந்த நிர்வாகிகள்.

மாவட்ட பொருளாளர் ராமநாதன் நன்றியுரை ஆற்றினார்.