நெல்லையில் கடந்த 27 ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆறுமுகமங்கலம் எனும் கிராமத்தை சேர்ந்த இளைஞர் கவின் செல்வகணேஷ் என்பவர் ஆணவ படுகொலை செய்யப்பட்டார்.

இந்த ஆணவ கொலைக்கு பொறுப்பேற்று சுர்ஜித் என்பவர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். சுர்ஜித்  என்பவர் மீது வழக்குகள் பதியப்பட்டு தற்சமயம் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க போவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்து வருகிறார்கள்.

இளைஞர் கவின் செல்வகணேஷ் ஆணவ படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சுர்ஜித் என்பவரின் தாய் தந்தையர் இருவர்களும் காவல் துறையில் பணி செய்வதாக அறிகிறோம். அவர்கள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. தமிழக அரசு திராவிட மாடல் அரசு ஆணவ படுகொலைக்கு எதிராக சிறப்பு சட்டம் நிறைவேற்ற வேண்டும். எனவும் ஆணவகொலை செய்த சுர்ஜித்என்பவர் மீதும் அவரது தாய் தந்தையர் காவல்துறை அதிகாரிகளாக இருப்பதாலும் அவர்கள் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்திலோ அல்லது வெளியில் வர முடியாத சட்டப் பிரிவுகளிலோ வழக்கு பதிவு செய்து கடுமையான தண்டனைகள் அரசு பெற்றுக் கொடுக்க வேண்டும்  எனவும் அரசு பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தகுந்த நிதி ஒரு கோடி பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வழங்க வேண்டும் எனவும்புரட்சி பாரதம் கட்சியின் தூத்துக்குடி மாநகர் மாவட்டத்தின் சார்பாக அரசை கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிப்பட்ட ஆணவ ஜாதி வெறி பிடித்த நபர்களை சட்டத்தின் முன்  நிறுத்தி சரியான தண்டனை பெற்றுக் கொடுக்க விட்டாலும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கவிட்டாலும் ஆணவப் படுகொலைக்கு எதிராக அரசு சிறப்பு தனி சட்டம் நிறைவேற்ற தவறினாலோ திராவிட மாடல் அரசை கண்டித்து தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இடங்களில் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம். என்பதை புரட்சி பாரதம் கட்சியின் சார்பாக அரசின் கவனத்திற்கு தெரிவித்துக் கொள்கிறேன். என்று மா. மாரிச்செல்வம் மாவட்ட செயலாளர் புரட்சி பாரதம் கட்சி தூத்துக்குடி மாநகர் மாவட்டம் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.