தமிழ்நாடு அரசு சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரடியாக பரமக்குடிக்கு வருகை தந்து தேசிய தலைவர் தியாகி இம்மானுவேல் சேகரன் ஆருக்கு மலர் அஞ்சலி செலுத்தினார். அவருடன் மாநில அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தியாகி இமானுவேல் சேகரன் பண்பாட்டு கழகத்தின் சார்பாகவும் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது.
பாரதிய ஜனதா கட்சி சார்பாக அதன் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் கட்சியினுடைய மூத்த முன்னோடி உறுப்பினர்கள் கலந்து கொண்டு தியாகி இம்மானுவேல் சேகரனுக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்கள். பரமக்குடி இமானுவேல் சேகரன் பண்பாட்டுக் கழகம் சார்பாக அவர்களுக்கு சிறப்பான வரவேற்பும் வழங்கப்பட்டது.
தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக அதன் பொதுச் செயலாளர் ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீதர் மற்றும் கட்சியினுடைய மூத்த பொறுப்பாளர்கள் மாவட்ட செயலாளர் ஒன்றிய செயலாளர் அனைவரும் கலந்து கொண்டு தியாகி இமானுவேல் சேகரன் அவர்களுக்கு மலர அஞ்சலி செலுத்தினார்கள். தமிழக வெற்றி கழகத்தின் அனைத்து பொறுப்பாளர்களையும் தியாகி இம்மானுவேல் சேகரனார் பண்பாட்டு கழகம் சார்பாக வரவேற்பு வழங்கப்பட்டது.
தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளர் மக்கள் தலைவர் அயிரம்பட்டி முருகேசன் பாண்டியன் ஒரு தினத்திற்கு முன்பாக பரமக்குடிக்கு சென்று இமானுவேல் சேகரன் அவருடைய கிராமத்திற்கு சென்று அங்கு சிலம்பாட்டம் மற்றும் பொங்கல் வைத்து பல்வேறு நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி நடத்தினார். மற்றும் பரமக்குடி இம்மானுவேல் சேகரனார் பண்பாட்டு கழகத்தினுடைய அனைத்து பொறுப்பாளர்களிடமும் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி சிறப்பாக நடத்தினார். பரமக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம மக்களும் மக்கள் தலைவர் முருகேச பாண்டியனுக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்தார்கள்.
புதிய தமிழகம் கட்சியினுடைய தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி மற்றும் இளைஞர் அணி தலைவர் ஷியாம் கிருஷ்ணசாமி பொதுச் செயலாளர் அய்யார் மற்றும் அனைத்து பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்கள்.
தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக அதன் தலைவர் ஜான்பாண்டியன் மற்றும் அக்கட்சியின் உடைய அனைத்து பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.
தமிழ்நாடு மக்கள் நல இயக்கத்தில் சார்பாக மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது மற்றும் தமிழ்நாடு முழுவதும் சுமார் 50 லட்சம் பேர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். பரமக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் முதுகுளத்தூர் அனைத்து ஒன்றியங்களிலும் கிராம நாட்டாமைகள் சார்பாகவும் கிராம மக்கள் சார்பாகவும் மேளம் முழங்க முளைப்பாரி ஊர்வலங்கள் மற்றும் சிலம்பாட்டம் கரகாட்டம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இறுதியில் விழாவிற்கு வந்திருந்த அனைத்து தெய்வேந்திர குல வேளாளர் சமூகத்தின் பொறுப்பாளர்கள் அனைவரும் தமிழக அரசு விரைவில் பட்டியல் வெளியேற்றம் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென்று அரசுக்கு கோரிக்கை வைத்தார்கள்.
தூத்துக்குடி
பரமக்குடியில் தியாகி இம்மானுவேல் சேகரனுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நினைவஞ்சலி மரியாதை செலுத்தினர்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி விளாத்திகுளத்தில் மாட்டு வண்டி போட்டி - அயிரவன்பட்டி முருகேச பாண்டியன் தலைமையில் நடைபெற்றது!!
அடுத்த
தூத்துக்குடியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் - மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்து சிறப்புரை!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026