தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு பகுதியில் குறைந்த மின் அழுத்தம் சம்மந்தமான குறைகளை சரி செய்ய கோரி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் வைத்து இன்று (25.03.2025) நடைபெற்ற மின் நுகர்வோர் குறைதீர்க்கும் முகாமில் மாவட்ட மேற்பார்வை பொறியாளர் பொறிஞர் சகர்பான் பி.இ அவர்களிடம் மதிமுக மாநகர செயலாளர் முருகபூபதி தலைமையில் மனு அளிக்கப்பட்டது.
அளிக்கப்பட்ட மனுவில் தெரிவித்ததாவது :-
தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு பகுதியில் உள்ள மாதவன் நகர் மேற்கு பகுதியில் 1 வருடமாக குறைந்த மின் அழுத்தம் பிரச்சனை உள்ளது.
இதனால் பொதுமக்கள் தங்கள் விலை உயர்ந்த மின்சாதன பொருட்கள் அடிக்கடி பழுது ஆகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள்.
பலமுறை பொதுமக்கள் தகவல் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் இல்லை, ஆகவே பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக குறைந்த மின் அழுத்தம் சம்மந்தமான குறைகளை சரிசெய்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அளித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுவின் போது மாவட்ட அவைத் தலைவர் பேச்சி ராஜ், தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் சரவணப் பெருமாள், அய்யனடைப்பு பகுதி லியோன் சம்பத் குமார், ஆகியோர் உடன் இருந்தனர்.
தூத்துக்குடி
குறைந்த மின் அழுத்தம் நடவடிக்கை எடுக்க கோரி மதிமுக கோரிக்கை மனு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம் சார்பில் 14 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு ஆடை அணிந்து ஆர்ப்பாட்டம்!!
அடுத்த
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் தேங்கிய மழைநீரை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை!!
இதையும் படிக்கலாம்
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026
தூத்துக்குடியில் ரூ.53.70 கோடியில் பக்கிள் ஓடை விரிவாக்கப் பணி தீவிரம்! அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் பணிகள் நிறைவு பெறும் – மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
09 Oct 2026