தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் சிஎம்என் ஷட்டில் கிளப் இணைந்து அசோக் நகர் பகுதியிலுள்ள மேற்கு மண்டல இறகுப் பந்து உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற மாநில அளவிலான இறகுப்பந்து போட்டியினை மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். 



நிகழ்ச்சியில் பி.எஸ்.டி.எஸ். வேல்சங்கர், கிளப் செயலாளர் ரமேஷ் கார்த்திகேயன், மாமன்ற உறுப்பினர்கள் சந்திரபோஸ், பொன்னப்பன், கண்ணன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பிரதிப் ஆகியோர் உடன் இருந்தனர்.