தூத்துக்குடி மாவட்டத்தில் ஆறு சட்டமன்ற தொகுதிகள் அடங்கிய தலைநகர் தூத்துக்குடி ஒவ்வொரு திங்கட்கிழமை தோறும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 6 தொகுதியையும் சார்ந்த பலர் கோரிக்கை மனு வழங்கி வருகின்றனர். அது முறையாக நடைபெறுகிறதா? என்றால் கேள்விக் குறியாகத் தான் இருக்கிறது.
இதுகுறித்து அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த. செல்லப்பாண்டியன் கூறுகையில் “கடந்த 4 ஆண்டு காலமாக நடைபெற்ற பணிகள் எது என்று கேட்டால் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்கள் நிறைவடைந்ததை திமுக தான் செய்த சாதனையாக கூறி தம்பட்டம் அடித்துக் கொள்கிறது.
புதியதாக செயல்படுத்திய திட்டங்கள் சொல்லும் அளவிற்கு எவுதும் இல்லை. இந்தியாவில் ஜனநாயகத்தின் 4 வது தூணாக இருந்து செயல்படும் பத்திரிகை துறையில் பணியாற்றுபவர்களுக்கு மாவட்டத்தில் ஒதுக்கப்பட்ட இடத்தில் முறையாக அதை இன்று வரை வீட்டுமணை பட்டா வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. திமுக ஆட்சிக்கு ஆதரவாகத்தான் பலர் செயல்படுகின்றனர். ஏன் காலதாமதம் எல்லோருக்கும் எல்லாம் அது தான் திராவிட மாடல் ஆட்சி என்று கூறுகிறீர்கள். இவர்களுக்கு எப்பொழுது வழங்கப்படும்.
கலெக்டா் உதவியாளராக இருக்கும் நபா்களில் ஒருவா் மாவட்டம் முழுவதும் பல்வேறு நிகழ்வுகளில் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. அங்கிருந்து கொண்டு பத்திாிகையாளா்களுக்கும் எதிராக செயல்பட்டு சில விஷயங்களில் குளிா்காய்ந்து கொண்டிருக்கிறாா்கள். இதற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விரைவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அனுமதி பெற்று மாவட்ட பத்திரிகையாளர்களின் கோரிக்கைக்கும் பொதுமக்களின் குறைகளை தீர்க்கக்கோரி போராட்டம் நடத்தப்படும் என்று கூறினார்.
ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் ஏசாதுரை கூறுகையில் ஒவ்வொரு ஊராட்சி பேரூராட்சி நகராட்சி மாநகராட்சி மற்றும் எம்.பி எம்.எல்.ஏ என அனைத்து பகுதிகளின் வளர்ச்சிக்கும் தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது. அந்த நிதியை முறையாக செய்திருந்தால் இப்படி கலெக்டர் அலுவலகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை மனுவோடு வரவேண்டிய அவசியம் இருக்காது. ஒதுக்கப்படும் நிதியை தனக்கு வேண்டியவர்களுக்கு பணியை கொடுத்து அதில் சுய விளம்பரங்களைத் தேடிக் கொண்டு மக்களைப் பற்றி சிந்திக்காமல் இருப்பது தான் ஒவ்வொரு வாரமும் பல பகுதிகளிலிருந்து தலைநகர் கலெக்டர் அலுவலக்திற்கு கோரிக்கை மனு கொடுக்க வருகின்றனர். நீண்ட கால பத்திரிகையாளர்களின் கோரிக்கையும் கிடப்பில் கிடக்கின்றது.
முதலமைச்சரின் தங்கை தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதியில் உள்ளவர்களுக்கு இந்த நிலை என்றால் தமிழ்நாடு முழுவதும் இதை விட குறைபாடுகள் அதிகமாகத்தான் மற்ற மாவட்டத்திலும் இருக்கும். இதை தமிழக அரசு விரைவாக பத்திரிகையாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். இல்லாத பட்சத்தில் ஓபிஎஸ் அனுமதி பெற்று போராட்டக் களத்திற்கு வருவோம் என்று கூறினார்.
சமூக ஆா்வலா் அக்னி பரமசிவன் கூறுகையில் இந்தியாவின் மொத்த உப்பு உற்பத்தியில் 30 சதவீதமும், தமிழ்நாட்டின் மொத்த உப்பு உற்பத்தியில் 70 சதவிகிதமும் தன்னகத்தே கொண்ட பெருமை மிகு மாவட்டம் தூத்துக்குடி உப்பு உற்பத்தி மட்டுமல்லாது மீன்பிடி தொழில்கள், ஜவுளி மற்றும் தீப்பெட்டி உற்பத்தி தொழில்கள் என தொழிற் நிறுவனங்களின் வளர்ச்சியிலும் செம்மைமிகு பாதையைக் கண்ட தூத்துக்குடியில் வான் வழித்தடம், கடல் வழித்தடம், இருப்பு வழித்தடம், சாலை வழித்தடம் என நான்குவழித் தடங்கள் மூலமாக மாநிலம் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளின் அத்தியாவசிய தேவைகளை வழிகாண செய்திடவும் பெரும் பங்காற்றி வருகிறது என்பது மாவட்டத்தின் பல சிறப்புகளில் ஒன்றாகும். மேலும் சுற்றுலா, சிறு தொழில்கள், விவசாயம், பாரம்பரிய கலாசாரம், தொன்மை மிக்க அகல்வாராய்ச்சி என மாவட்டத்தின் பெருமைகள் நீண்டு கொண்டே செல்வதாக உள்ளது.
இவ்வாறு பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கிய தூத்துக்குடி மாவட்டத்தின் தலைமை நிர்வாக அலுவலமாக இருப்பது மாவட்ட ஆட்சியர் அலுவலகமாகும். கோவில்பட்டி, தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் ஆகிய 3 வருவாய் கோட்டங்களை உள்ளடக்கிய மாவட்டத்தில் 1 மாநகராட்சியும், 3 நகராட்சிகளும், 18 பேரூராட்சிகளும், 10 தாலுகாக்களும், 12 வட்டார வளர்ச்சி நிர்வாகங்களும், 480 வருவாய் கிராமங்களையும் உள்ள நிர்வாக அலுவலக பணிகளின் மூலமாக மக்களின் அன்றாட அத்தியாவசிய தேவைகளான அடிப்படை வசதிகளும், அரசின் நலத்திட்டங்களும் சென்றடைகின்றன.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட மக்கள் தங்களுடைய பல்வேறு கோரிக்கைகளுக்கும், அரசின் நலப்பணித்திட்ட உதவிகளுக்கும், அடிப்படை வசதிகளுக்கும், சுற்றுச்சூழல் நலன்களுக்குமென அன்றாடம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனுக்கள் வந்த வண்ணமே உள்ளன. தூத்துக்குடி மாவட்ட கலெக்டா் அலுவலகத்தில் வாரந்திர மக்கள் குறைத்தீர் கூட்டம், மாதந்திர விவசாயிகள், மீனவர்கள், மாற்றுத்திறனாளிகள், நுகர்வோர்கள், ஓய்வூதியதாரர்கள், படைவீரர்கள் என பல்வேறுபட்ட மக்கள் குறைதீர் கூட்டமானது மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்று வருகின்றன. இதுபோக கோட்ட அலுவலகம் மற்றும் மாநகராட்சி சார்பிலும் மக்களிடமிருந்து குறைதீர் மனுகள் பெறப்படுகின்றன. இவ்வாறு பல நிர்வாகத்தினர் மற்றும் வகைப்பட்ட முறையில் கோரிக்கை மனுகள் பெறப்பட்டாலும் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் சென்று மனு அளிக்கும் மக்களின் கூட்ட எண்ணிக்கைகள் குறைந்தபாடில்லை. மக்களின் தேவைகளையும் குறைகளையும் அறிந்து கொள்வது மட்டுமன்றி மத்திய மாநில அரசுகளின் பல்வேறுபட்ட நலத்திட்டங்களை முறையாக கண்டறிந்து மக்களிடையே கொண்டு செல்வதே ஒவ்வொரு அரசு பணியாளர்களின் சேவைப்பணியாகும். இத்தகைய பணிகளின் தலைமையாக இருந்து மாவட்டம் முழுமைக்கும் தலைமை பணியாளராக இருப்பவர் மாவட்ட கலெக்டர்.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பல பகுதிகளில் இருந்தும் மக்களின் அன்றாட தேவையான குடிநீர் வசதி, பத்திாிகையாளர் வீட்டுமனை பட்டாக்கள், இயற்கை சீற்ற பேரிழப்புகள் மட்டுமன்றி சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அரசின் திட்டப் பணிகளுக்கான கோரிக்கை மனுக்கள், உதவிக் தொகை, மானியக் கடன்கள், வேலைவாய்ப்புகள் என சராசரியாக ஒவ்வொரு குறைதீர் கூட்டத்திலும் நானூறு வீதம் ஆண்டு ஒன்றுக்கு 16,500 எண்ணிக்கையிலான மனுக்கள் பெறப்படுகின்றன. இதில் சுமார் ஐந்து சதவீத மனுக்கள் கூட நிறைவேற்றப்படுவதில்லை. பெயரளவில் பெறப்பட்ட மனுக்களின் நிறைவேற்ற நாட்கள் வாரம், மாதம் என கூறி மழுங்கடிக்கப்பட்டு வரும் சம்பவங்களே அரங்கேறி வருகின்றன.
மனுக்கள், சட்டம் ஒழுங்குகள், விவசாயிகள், நுகர்வோர்கள், படைவீரர்கள், மாற்றுத் திறனாளிகள் என அடுக்கடுக்கான வகையில் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தினாலும் மாவட்ட கலெக்டா் அலுவலகத்தில் மக்களின் பெருவெள்ளக் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளன, கோரிக்கைகள் நிறைகிறதா அல்லது அதிகாரிகளின் செயல்பாடுகள் குறைகிறதா என்பது ஐயப்பாடாகவே உள்ளது. மாவட்டத்தின் கலெக்டா் என்பவர் ஆட்சியரகத்திற்கு மட்டுமல்லாது மாவட்ட முழுவதும் உள்ள அலுவலகங்களின் மீது பார்வையை செலுத்தி அந்தந்த பகுதிகளில் பொதுமக்களின் அடிப்படை கோரிக்கைகள் நிறைவேற்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்பதே எல்லோரின் வேண்டுகோள். என்று கூறினாா்.
தூத்துக்குடி
தூத்துக்குடி கலெக்டர் அலுவலக மெத்தன போக்கு குறைதீர்க்கும் முகாம் - மனுக்களுக்கு தீர்வு எப்போது!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் சிஎம்என் ஷட்டில் கிளப் இணைந்து நடத்திய மாநில அளவிலான இறகு பந்து போட்டியினை மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார்!!
அடுத்த
சாதாரண உப்பு விற்பனைக்கு தடையில்லை - சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்புக்கு தூத்துக்குடி தன்பாடு உப்பு ஏற்றுமதி வியாபாரிகள் சங்கம் வரவேற்பு!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026