தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட அண்ணா நகர் பிரதான சாலையில் பாதாள சாக்கடை மேன்ஹோலில் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் அதனை பார்வையிட்டு மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார். மேலும் பணிகள் முடியும் வரை மாநகர மக்கள் சிரமங்களை பொறுத்துக் கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.



ஆய்வின் போது பகுதி கழக செயலாளர் ரவீந்திரன், மாமன்ற சரவணக்குமார், மாநகர தொண்டரணி துணை அமைப்பாளர் சங்கரநாராயணன், பகுதி விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் சீனிவாசகுமார் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.