ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் மணியாச்சி கொல்லங்கிணறு, பாறைக்குட்டம், மேலப்பாண்டியாபுரம் மற்றும் மருதன்வாழ்வு ஊராட்சி கிராம மக்களுக்கான "உங்களுடன் ஸ்டாலின்" சிறப்பு திட்ட முகாம் மணியாச்சி R.C. தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது.


ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா கலந்து கொண்டு பொதுமக்களுக்கு முகாமில் வழங்கப்படும் சேவைகள் குறித்து கேட்டறிந்தார். மற்றும் "உங்களுடன் ஸ்டாலின்" முகாமில் மனு வழங்கிய மனுதாரர்களுக்கு பட்டா மாறுதல், மின்சார வாரியம் மற்றும் பொதுவிநியோக திட்ட பெயர் திருத்தம் ஆகிய ஆணைகளை வழங்கினார். மற்றும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 10 லட்சம் மதிப்பிலான காசோலையும், வேளாண்மைத்துறையின் மூலம் பேட்டரி தெளிப்பான், மற்றும் வேளாண் இடுபொருட்களையும் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பென்னட் ஆசீர் வட்டாட்சியர்கள் அறிவழகன் சுசிலா வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜவஹர்
சசிகுமார் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.