தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பெருமாள் தெரு, சண்முகபுரம், தாமோதரன்நகர் ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் சரிவர வரவில்லை என்று மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமிக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
     
இதனையடுத்து இரவு 7 மணி அளவில் தாமோதரன் நகர் பகுதிக்கு மேயர் ஜெகன் பொியசாமி தனியாக சென்று லெவிஞ்சிபுரம் நீா்தேக்க தொட்டியிலிருந்து தாமோதரன் நகர் பகுதிக்கு வரும் மெயின் பைப் லைன், ஏ.எஸ்.கே.ஆர் கல்யாண மண்டபம் பகுதியில் உள்ள மெயின் பைப் லைன் ஆகியவற்றை கட் பண்ணி டம்மி போட்டு அடைத்து வைத்தார்.
      
பின்னா் அங்கிருந்து பெருமாள் தெருவில் உள்ள ஒவ்வொரு வீடாக சென்று குடிநீர் வருகிறதா என்று அங்கு இருந்த பொது மக்களிடம் எத்தனை நாட்களாக குடிநீர் வரவில்லை இப்போது வருகிறதா என்று வீடு வீடாக நடந்து சென்று கேட்டறிந்தார். அப்போது அந்த பகுதியில் பாதிக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு குடிநீர் சரியான முறையில் வந்து கொண்டிருந்தது சுமார் நூறு வீட்டுக்கு குடிநீர் வராமல் இருப்பதாக பொதுமக்கள் கூறினாா்கள்.

அந்த வீடுகளுக்கும் நேரில் சென்று குடிநீர் வருகிறதா வரவில்லை என்று பார்வையிட்டு பின்பு மாநகராட்சி வாழ்வு ஆபரேட்டர் ஒப்பந்தக்காரர் ஆகியோரிடம் அதற்கான விபரங்களை கேட்டறிந்து உடனடியாக ஜேசிபி இயந்திரத்தை வரவழைத்து தோண்டி பாா்த்து தண்ணீர் வருவதற்கான பணிகளை மேற்க் கொண்டார்.
    
இரவு 8 மணி முதல் நடு இரவு 12 மணி வரை ஒவ்வொரு வீடாக சென்று குடிநீர் வருகிறதா என்று ஆய்வு செய்தாா். அங்கு இருந்த பொதுமக்கள் இதுவரைக்கும் இருந்த மேயர்களில் குடிநீர் வரவில்லை ரோடு சரியில்லை என்று கூறினால் அதிகாரிகளை தான் அனுப்புவார்கள்.

ஆனால் எங்களின் கோரிக்கையை ஏற்று வீடு வீடாக குடிநீர் வருகிறதா என்று கேட்டறிந்தது எங்களுக்கு இப்படி ஒரு மேயர் கிடைத்தது பாக்கியம் என்று பொதுமக்கள் பாராட்டினார்கள். 5 மணி நேரம் தாமோதரன் நகர் சண்முகபுரம் பெருமாள் தெரு ஆகிய பகுதிகளில் நடந்தே சென்று குடிநீர் பணிகளை பார்வையிட்டது குடிநீர் வராமல் இருந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கண்டது பொதுமக்கள் மத்தியில் பெரிதும் பாராட்டும் விஷயமாக அமைந்தது.

இதகுறித்து மேயர் ஜெகன் பொியசாமி கூறுகையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்போில் உள்ளாட்சித் துறை அமைச்சர் நேரு ஆலோசனையின்படி கனிமொழி எம்.பி ஆணைக்கிணங்க மாநகராட்சி பகுதி மக்களுக்கு தேவையான வசதிகளை கண்டிப்பாக செய்து கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் நகராட்சியாக இருந்த காலத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்பாக 30 அடி ஆழத்தில் போடப்பட்ட பழைய பைப் களை அகற்றி விட்டு புதிதாக கருப்பு பைப் லைன் அமைக்கப்பட்டு எல்லா பகுதி மக்களுக்கும் 24 மணி நேரமும் குடிநீா் வழங்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் அதை முறைப்படுத்தி செய்து வருகிறோம்.

சில பகுதிகளில் சிறு சிறு குறைபாடுகள் ஏற்படுகிறது. அந்த பகுதிகளையும் ஆய்வு மேற்கொண்டு முழுமைாயக தீர்த்து வைத்து வருகிறோம். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஓரு நாளைக்கு 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் நாட்டு மக்களுக்காக பணியாற்றி வருகிறாா். அவரால் அடையாளம் காட்டப்பட்ட நாங்களும் அதே வழியில் பணியாற்றி வருகிறோம். திராவிட மாடல் ஆட்சியில் எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் இரவாக இருந்தாலும் பகலாக இருந்தாலும் பணி செய்வது எங்களது கடமை என்று கூறினாா்.

பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மாவட்ட பிரதிநிதி ஏசுவடியான், வட்டச் செயலாளர் பொன்ராஜ், பகுதி சபா உறுப்பினர் செல்வராஜ், வட்ட பிரதிநிதி ஜெபக்குமாா் ரவி, மற்றும் ஜெயபாண்டி, சேகா், தங்கமணி, கெய்சா், ராஜேந்திரன், உத்திரபாண்டி, ராஜன், போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகா், கபடி கந்தன், உள்பட பலர் உடனிருந்தனா்.