தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட ராஜீவ் நகர் பகுதியில் நடைபெற்று வரும் புதிய வடிகால் அமைக்கும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


மழைநீர் தேங்காமல் வெளியேற்றும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் பெற்றார். மேலும், இந்த வடிகால் அமைப்பை கோக்கூர் குளம் வரை நீட்டிப்பதற்கான இடங்கள் மற்றும் பாதைகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


இந்த ஆய்வின்போது வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன் உடனிருந்தார்.


பகுதியில் மழைக்காலங்களில் ஏற்படும் நீர்தேக்க பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதற்காக, பணிகளை தரத்துடன் விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டது.