தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும் மாவட்ட காவல்துறை சார்பாக சைபர் விழிப்புணர்வு எச்சரிக்கை
தற்போது பெரிய நிறுவனங்களின் முதலாளிகள் மற்றும் நிறுவனங்களில் உயர் பதவியில் இருக்கும் நபர்களின் புகைப்படங்களை வைத்து போலியாக வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் மின்னஞ்சல் கணக்குகளை உருவாக்கி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களை தொடர்பு கொண்டு நிறுவனங்களின் வங்கி கணக்கு விவரங்கள் உட்பட நிறுவனம் சார்ந்த அனைத்து விவரங்களையும் கேட்டு தெரிந்து கொண்டு வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை மோசடி செய்யும் புதிய யுக்தி தற்போது சைபர் குற்றவாளிகளால் அரங்கேற்றப்பட்டு வருகிறது.
எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பெரிய நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் நபர்களின் நலன் கருதி மேற்படி சைபர் மோசடி குற்றங்களில் இருந்து தற்காத்துக் கொண்டு விழிப்புடன் இருக்குமாறு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
மேலும் இந்த சைபர் மோசடி குறித்து தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து நிறுவனங்களும் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் நபர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியும், சைபர் குற்ற உதவி எண் 1930 மற்றும் cybercrime.gov.in என்ற சைபர் குற்ற இணையதளம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு பொதுமக்கள் நலன் கருதி தூத்துக்குடி மாவட்ட காவல்துறை தெரிவித்துக் கொள்கிறது.
தூத்துக்குடி
தூத்துக்குடி தொழில் நிறுவனங்களுக்கு காவல்துறை கொடுத்து மெஸேஜ்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
சேவல் கூவும் முன்பே தன் பணியை தொடங்கிய கவுன்சிலர்!!
அடுத்த
தூத்துக்குடி : பாலியல் குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை - போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு!!
இதையும் படிக்கலாம்
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026
தூத்துக்குடியில் ரூ.53.70 கோடியில் பக்கிள் ஓடை விரிவாக்கப் பணி தீவிரம்! அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் பணிகள் நிறைவு பெறும் – மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
09 Oct 2026