தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் பகுதியில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் தமிழ்நாடு அரசின் குறுங்குழும மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.5.29 கோடி மதிப்பில் புதிய கருப்பட்டி மற்றும் பனைப்பொருட்கள் குறுங்குழும கட்டிடம் கட்டப்பட உள்ளது.
இத்திட்டத்தின் அடிக்கல் நாட்டும் விழா இன்று (23.10.2025) நடைபெற்றது. விழாவில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் அடிக்கல் நாட்டினார். மாவட்ட ஆட்சித்தலைவர் க. இளம்பகவத், இ.ஆ.ப., தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி. மார்கண்டேயன் முன்னிலையில் விழா நடைபெற்றது.
மாவட்ட தொழில் மைய இணை இயக்குனர் சொர்ணலதா உள்ளிட்ட அரசு அதிகாரிகள், தொழில்முனைவோர், பனை மற்றும் கருப்பட்டி உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
இந்த குறுங்குழும கட்டிடம் உருவாகுவதால், பனைப்பொருட்கள் மற்றும் கருப்பட்டி உற்பத்தியில் ஈடுபடும் சிறு தொழில்முனைவோருக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் எனவும், உள்ளூர் பொருளாதார வளர்ச்சிக்கு இது ஊக்கமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
தூத்துக்குடி
வேம்பாரில் ரூ.5.29 கோடி மதிப்பில் புதிய கருப்பட்டி மற்றும் பனைப்பொருட்கள் குறுங்குழும கட்டிடம் – அடிக்கல் நாட்டிய அமைச்சர் கீதா ஜீவன்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
இரவு நேரத்தில் மூன்று மணி நேரம் தெருத்தெருவாக மழைநீர் தேங்கிய பகுதிகளை பார்வையிட்ட மேயர் ஜெகன்!!
அடுத்த
தூத்துக்குடி பத்திரிகையாளர்களுக்கு வீட்டு மனை வழங்க வலியுறுத்தி மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் – முன்னாள் அமைச்சர், மேயர் உள்ளிட்டோர் கலந்து ஆதரவு!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026