ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி மாப்பிள்ளையூரணி மாதா நகர் அருள்மிகு ஶ்ரீ சந்தண மாரியம்மன் கோவில் 43 ஆம் ஆண்டு கொடை விழாவை முன்னிட்டு மாதா நகர் MST கபாடி குழு நடத்திய மாபெரும் கபாடி போட்டியை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கபாடி போட்டியை தொடங்கி வைத்து விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தினார்.

அதைத்தொடர்ந்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி சார்பில் மாணவ மாணவிகளுக்கு நோட்டுகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தொழிலதிபர் சுதாகர் மாவட்ட ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் TTC. ராஜேந்திரன் மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் பொன்பாண்டி ரவி துணை அமைப்பாளர் ஜீவா மற்றும் கோவில் நிர்வாகிகள், கழக நிர்வாகிகள் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

