தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் வாகைகுளம் ராஜலட்சுமி திருமண மண்டபத்தில் இன்று காலை முடிவைத்தானேந்தல் மற்றும் கட்டாலங்குளம் கிராம ஊராட்சி மக்களுக்கான "உங்களுடன் ஸ்டாலின்" சிறப்பு திட்ட முகாம் நடைபெற்றது.


ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா கலந்து கொண்டு பொதுமக்களுக்கு முகாமில் வழங்கப்படும் சேவைகள் குறித்து கேட்டறிந்தார். மற்றும் "உங்களுடன் ஸ்டாலின்" முகாமில் மனு வழங்கிய மனுதாரர்களுக்கு  இலவச வீட்டுமனைப் பட்டா, மின்சார வாரியம் பெயர் திருத்தம் ஆகிய ஆணைகளை எம்எல்ஏ சண்முகையா வழங்கினார்.

முகாமில் வட்டாட்சியர் முரளிதரன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஐகோர்ட் மகாராஜா, பானு ஒன்றிய கழகச் செயலாளர்கள் S.R. சுப்பிரமணியன், ஜெயக்கொடி தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தூர்மணி மற்றும் அனைத்துத்துறை சார்ந்த அலுவலர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.