தூத்துக்குடி பாளையங்கோட்டை சாலை மறவன்மடம் பகுதியில் அமைந்துள்ள செர்வைட் சி.பி.எஸ்.சி பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் முத்தமிழ் இலக்கிய மன்ற விழாவானது நடைபெற்றது.

தூத்துக்குடியிலேயே மிகப் பிரமாண்டமான செர்வைட் சி.பி.எஸ்.சி பள்ளியில் முத்தமிழ் இலக்கிய மன்றம் கல்வி வளர்ச்சி நாள் குறித்து நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழன்டா கலைக்குழு தலைவர் கலைச் சுடர்மனி செ. ஜெகஜீவன் பங்கேற்று காமராஜரின் நல்லெண்ணங்கள், நல்ல சிந்தனைகள் பற்றியும், தமிழர் கலைகள், தமிழர் உணவுகள், தமிழர் மருத்துவம், போன்றவற்றைப் பற்றியும் மாணவ, மாணவியர்களுக்கு எடுத்துரைத்தார். இந்த விழாவில் இலக்கிய மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவியேற்பு நிகழ்வும் நடந்தது.

காமராஜருடன் ஒரு நேர்காணல், தமிழ் மொழியின் சிறப்பை அறிவித்த அயல் நாட்டவர்கள், பொம்மல் நாடகம் போன்றவைகளை மிகவும் சிறப்பாக பள்ளி மாணவர்களை வைத்து நிகழ்ச்சிகளை தொகுத்தும் பள்ளி மாணவர்களை வைத்து கலை நிகழ்ச்சிகள் நடத்தியும் சிறப்பு செய்யப்பட்டது.
பள்ளி முதல்வர் அருட்சகோதரி மெர்சி இம்மாகுலேட் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் குழந்தைகள் ஆசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.