இந்தியாவின் அனைத்து  மாநிலத்தின் மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின்  பிரதிநிதிகள் சார்பில் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு தமிழகத்தில் இருந்து சுமார் 50 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மற்றும் pucl உடைய தேசிய குழு உறுப்பினர்கள் தோழர் டி.எஸ்.எஸ். மணி, தோழர் பேராசிரியர் சங்கர் லிங்கம், தோழர் பாலமுருகன், தேசிய பொதுச்செயலாளர் சுரேஷ், தேசிய துணை தலைவர் பேராசிரியர் சரஸ்வதி, தேசிய தலைவர் கவிதா, மதுரை வழக்கறிஞர் ஜான் வின்சென்ட், கோவை வழக்கறிஞர் மலரவன், காஞ்சிபுரம் விஜயா, சென்னை மீரா, சென்னை முகேஷ், தூத்துக்குடி சாமு. காந்தி உட்பட தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டத்தில் இருந்தும் பி.யூ.சி.எல் பொறுப்பாளர்கள் பலர் கலந்து  கொண்டனர். அதுபோல தேசிய அளவில் அனைத்து மாநிலத்தின் பி.யு.சி.எல் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.



மாநாடானது தொடர்ச்சியாக மூன்று நாள் நடைபெற்றது. அகில இந்திய அளவில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நாட்டினுடைய முக்கிய பிரதிநிதிகள் பல்வேறு சமூக பிரச்சனைகள் குறித்தும் பல்வேறு ஒடுக்கு முறைகள் குறித்தும் மனித உரிமை மீறல் குறித்தும் கலந்துரையாடல் நடத்தினர்.


மாநாட்டிற்கு வருகை தந்த பிரதிநிதிகள் அனைவருக்கும் தங்கும் இடம் உண்ண உணவு அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது. இந்திய அரசியலமைப்பின் படி வழங்கப் பட்டிருக்கின்ற அனைத்து உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் ஆதிவாசிகள் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் அவர்களுடைய வாழ்வாதாரம் மேன்மையை வேண்டும் அவர்கள் வாழ்கின்ற காட்டு பகுதிகளை அளிக்கக்கூடாது. அவர்களது உரிமைகளை அவர்களிடம் கேட்டு அதற்கு ஏற்றார் போல அரசு நடந்து கொள்ள வேண்டும்.

அவருடைய தலைமைத்துவத்தை அரசியலில் தேசிய அளவில் பிரதிபலிக்க வேண்டும் அவர்களுக்கு கல்வியில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். மீனவர்களுடைய வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும். மீன் வளம் தொழில் முற்றிலும் அழிந்து வருகிறது. அதை அரசு மீட்டெடுக்க வேண்டும் அவர்களுக்கு ஏற்படும் மனித உரிமை மீறல்கள் பாதுகாக்கப்பட வேண்டும் அவர்கள் வாழ்வில் வளம் பெறுவதற்கு அவர்களுக்கு மக்கள் பிரதிநிதித்துவ அடிப்படையில் தனி  இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.

கடல் பகுதிகளை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அரசு வழங்கக் கூடாது. கடல் பரப்புகளை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கினால் அவருடைய மீன் பிடி தொழில் முற்றிலும் அழிந்து நாசமாகிவிடும் அவருடைய வாழ்வாதாரம் அழிந்துவிடும். எனவே அரசு எந்த காரணத்தை கொண்டும் கடல் பரப்பளவை கடல் பகுதியை தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு குத்தகை மற்றும் சொந்தமாகவோ வழங்கக்கூடாது தோழர் டி.எஸ்.எஸ். மணி பேசும்போது மத்திய அரசு தற்போது மிகவும் பலவீனமாக இருக்கிறது. பலவீனமாக இருக்கும் காரணத்தினால் ஜனநாயக உரிமைகளுக்குகான போராட்டத்தை கண்டு பீதி அடைந்து பீதி வன்முறைகளை கட்டவிழ்த்து விடுகிறது.

பாராளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்களும் ஆளுங்கட்சியை போல் சிந்திக்கின்றனர். அதனால் சிவில் உரிமையை தளத்திலிருந்து தாக்கும் தன்மை கொண்ட இயக்கங்களை முன்னெடுக்க வேண்டும் இவ்வாறு பேசினார்.
தற்போது தொடர்ச்சியாக இந்த கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து இந்த கூட்டமானது நாளையும் தொடர்ச்சியாக ராஞ்சியில் நடைபெறும். என்று ராஞ்சியில் நடைபெற்று கொண்டு இருக்கின்ற கூட்டத்தில் தூத்துக்குடியில் இருந்து கலந்து கொண்டு இருக்கின்ற தோழர் சாமு. காந்தி தெரிவித்தார்.


உச்ச நீதிமன்ற உத்தரவின்படி வேதாந்தா ஸ்டெர்லைட் தொழிற்சாலை தற்போது மூடப்பட்டுள்ளது. ஆனால் ஸ்டெர்லைட் நிர்வாகம் தொழிற்சாலையை மீண்டும் திறக்க முயற்ச்சி செய்து வருகிறது. அதற்காக அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்களை உள்ளடக்கிய ஒரு குழுவை அமைத்துள்ளனர். சில மாற்றங்களுடன் தொழிற் சாலையை மீண்டும் திறக்கலாம் என்று அவர்கள் கூறியுள்ளனர். தொழிற்சாலை மீண்டும் திறக்கப்பட்டால் அது தூத்துக்குடி மக்களின் உடல் நலத்திற்கு கேடாக இருக்கும். எனவே தொழிற்சாலையை நிரந்தரமாக மூடுவதற்கு நடவடிக்கைளை மேற்க்கொள்ள வேண்டுமென எம். காந்தி பி.யு.சி.எல் தேசியக் குழு உறுப்பினரிடம் இதுகுறித்து மனு ஒன்றை அளித்தார்.