தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் அதிவேக இணைய வசதி, கணினி மற்றும் தேவையான மின்னணு உபகரணங்கள் இல்லாத நிலையிலும், வரும் 1ஆம் தேதி முதல் இ-பைலிங் நடைமுறையை கட்டாயப்படுத்தும் முயற்சியை கடுமையாக எதிர்த்து, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்றப் பணிகளை முழுமையாக புறக்கணித்தனர்.
நாகர்கோவில் நீதிமன்றம் முன்பு, நாகர்கோவில் வழக்கறிஞர்கள் சங்கம் தலைமையில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இ-பைலிங் நடைமுறைப்படுத்த தேவையான அடிப்படைத் தொழில்நுட்ப வசதிகள் இல்லாத நிலையில் இதனை கட்டாயப்படுத்துவது நடைமுறைக்கு புறம்பானது, வழக்குரிமை பாதிக்கப்படக்கூடியது என்று அவர்கள் வலியுறுத்தினர்.
இன்றைய போராட்டத்தால் நாகர்கோவில் நீதிமன்றங்களின் வழக்குப் பணிகள் முழுமையாக முடங்கியிருந்தன. போராட்டம் குறித்து வழக்கறிஞர்கள் தொடர்ந்து கலந்துரையாடி, தேவையான நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தூத்துக்குடி
இ-பைலிங் கட்டாயத்திற்கு எதிர்ப்பு – நாகர்கோவில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரதப் போராட்டம்; நீதிமன்றப் பணிகள் முடக்கம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பு செய்த நிறுவனத் தலைவர் சகிலன்!!
அடுத்த
G.V. மார்கண்டேயன் எம்எல்ஏ தொடக்கி வைத்த திசையன்விளை–இராமேஸ்வரம் புதிய அரசு பேருந்து சேவை!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026