தூத்துக்குடி நாயுடு மகாஜன சங்கத்தின் செயற்குழு கூட்டம் இன்று (12.10.2025) காலை 10.30 மணிக்கு சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. சங்க மேனேஜிங் டிரஸ்டி விவேகானந்தன் தலைமையில், சங்க செயலாளர், டிரஸ்ட் உறுப்பினர் ரெங்கசாமி முன்னிலையில் நடந்த கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்
விவேகானந்தன், ரெங்கசாமி, கே.ஆர். சுப்பிரமணியன், மோகன், செல்லச்சாமி, வெங்கடேஷ், வெங்கட கிருஷ்ணன், முருகன், கோவிந்தசாமி, அங்குசாமி, மந்திர மூர்த்தி, எஸ். சங்கர நாராயணன், அழகிரி சாமி.

முக்கிய தீர்மானங்கள் :-

ஜனவரி 2026-ல் பொதுமகாசபை கூட்டம் நடத்துவதாக ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.

செயற்குழு உறுப்பினர்கள் அழகர்சாமி நாயுடு மற்றும் கோவிந்தசாமி நாயுடு பதவியில் இருந்து ராஜினாமா செய்ததால், அவர்களின் ராஜினாமா கடிதம் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஆயுள் சந்தா உறுப்பினராக இல்லாத கிருஷ்ணவேணி செயற்குழு உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக தீர்மானிக்கப்பட்டது.

திருவாளர்கள் பெருமாள் செல்வராஜ் மற்றும் நடராஜன் ஆகியோரின் விண்ணப்ப கடிதம் ஏற்கப்பட்டு செயற்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

புதிதாக ஆயுள் சந்தா உறுப்பினர்களாக சேர விரும்புபவர்கள் ரூ.1000 சந்தா கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். சங்க செயலாளர் ரெங்கசாமிக்கு அதற்கான முழு அதிகாரம் வழங்கப்பட்டது.