தூத்துக்குடி மாநகரின் அடையாளமாக திகழும் உப்பளத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நலனுக்காக, தூத்துக்குடி தன்பாடு உப்பு மூடை சுமை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு போனஸ் வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், தொழிலாளர்களின் சேமிப்புகளை ஒருங்கிணைத்து, அவர்களுக்கே போனஸாக வழங்கும் பாரம்பரியத்தை தொடர்ந்தும் கடைபிடித்து வரும் சங்கத்தின் பொது செயலாளரும் தூத்துக்குடி மாநகர மேயருமான திரு.ஜெகன் பெரியசாமி அவர்கள் தொழிலாளர்களுக்கு நேரடியாக போனஸ் தொகையை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மேயர் ஜெகன் பெரியசாமி அவர்கள் கூறுகையில்,

 “எனது தந்தையார் பொதுச் செயலாளராக இருந்த காலத்தில் தொழிலாளர்களுக்காக அறிமுகப்படுத்திய இந்த போனஸ் வழங்கும் திட்டம், இன்று வரை எங்கள் சங்கத்தின் பெருமையாக தொடர்ந்து வருகிறது. தொழிலாளர்களின் உழைப்பே தூத்துக்குடியின் அடித்தளம். அவர்களுக்கான நலனே எங்கள் முக்கியக் கடமை,” எனத் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் பொருளாளர் ஆறுமுகநயினார், மாவட்ட கழக பொருளாளர் சுசீ ரவீந்திரன், பொது குழு உறுப்பினர் கோட்டுராஜா, வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், செயற்குழு உறுப்பினர் C.S.ராஜா உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.