தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த ஆல்பர்ட் ஜான் இடமாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நெல்லை மாவட்ட எஸ்பியாக பணியாற்றி வந்த சிலம்பரசன் தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய எஸ்பியாக நியமிக்கப்பட்டார்.


இதனைத் தொடர்ந்து, இன்று அவர் அதிகாரப்பூர்வமாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பதவியைப் பொறுப்பேற்றுக் கொண்டார். பொறுப்பேற்ற பின், மாவட்டத்தின் சட்டம்–ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு நிலை குறித்து காவல் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.


பின்னர், புதிய எஸ்பி சிலம்பரசன் மரியாதை நிமித்தமாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத்தை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு மாவட்ட நிர்வாகத்திற்கும் காவல் துறைக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்ததாக தெரிவிக்கப்பட்டது.