ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் அனவரதநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் தெய்வச்செயல்புரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்காளர் தீவிர சிறப்பு திருத்த முகாம்களை ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


முகாம்களில் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் உள்ளிட்ட பணிகள் முறையாக நடைபெறுகிறதா என்பதை அவர் கேட்டறிந்தார். பொதுமக்கள் இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.


இந்த நிகழ்வில் கருங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் ராமசாமி, கிழக்கு ஒன்றிய செயலாளர் சுரேஷ்காந்தி, பெருமாள் கிளை செயலாளர் கந்தசாமி, ஒன்றிய தொழிலாளர் அணி ராமர், இளைஞர் அணி துணை அமைப்பாளர் அர்ஜுன், அம்பேத்கர் நகர் முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.