இந்தியாவின் 79 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று (15.8.2025) காலை 8.00 மணியளவில் தூத்துக்குடி சேர்வைக்காரன்மடம் ஊராட்சி காமராஜர் நகரில் அமைந்துள்ள பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் (அமைப்பு)  தலைமை அலுவலகத்தில் நிறுவன தலைவர் எஸ்.பி. மாரியப்பன் தேசியக் கொடியை ஏற்றி அனைவருக்கும் இனிப்பு வழங்குகினார்.
 
அதைத்தொடர்ந்து பள்ளி குழந்தைகளுக்கு ஸ்கூல் பேக், நோட்புக், மற்றும் கல்வி உபகரணங்கள் போன்றவைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் (அமைப்பு) நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், பொது மக்கள் திரளாக வந்து கலந்து கொண்டு தேசியக் கொடிக்கு மரியாதை செய்து சிறப்பு செய்தனர்.