தூத்துக்குடி மாநகராட்சி மத்திய அலுவலக வளாகத்தில் 79 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாநகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள பிரமாண்டமான  தேசிய கொடியினை மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் பானோத் ம்ருகேந்தர் லால் முன்னிலையில் ஏற்றி மரியாதை செலுத்தி அனைவருக்கும் விடுதலை நாள் (சுதந்திர தின) வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.


அதன்பின்பு தூத்துக்குடி மாநகராட்சியில் சிறப்பாக  பணிபுரிந்த மாநகராட்சி அதிகாரிகள், அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள், தன்னார்வலர்கள், வணிக நிறுவனங்கள் ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ்களை மேயர் வழங்கி சிறப்புரை நிகழ்த்தினார்.


நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அதிகாரிகள், துறை சார்ந்த அலுவலர்கள் கழக நிர்வாகிகள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.