தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் செப்டம்பர் 15 ம் தேதியான இன்று பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி 42 வது வார்டு கட்சி அலுவலகத்தில் வைத்து மேற்கு மண்டல தலைவர் அன்னலெட்சுமி தலைமையில் திமுக பொதுக்குழு உறுப்பினர் கோட்டு ராஜா முன்னிலையில் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் திமுக கழக கொடி ஏற்றி பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அனைவரும் மரியாதை செலுத்தினர்.

அதைத்தொடர்ந்து "தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் உறுதிமொழி" பொதுக்குழு உறுப்பினர் கோட்டு ராஜா தலைமையில் பகுதி சபா உறுப்பினர்கள் உள்ளிட்ட 42 வது வார்டு கழக செயல்வீரர்கள் அனைவரும் கலந்து கொண்டு,

"தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன்!

ஓரினியில் தமிழ்நாடு குடும்பத்தில் இணைந்துள்ள 1 கோடி குடும்ப உறுப்பினர்களும் சேர்ந்து தமிழ்நாட்டை தலைகுனிய விட விடமாட்டேன் என உறுதி ஏற்கிறோம் .

நான் தமிழ்நாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விகிதாச்சாரத்தைக் குறைக்கும் நியாயமற்ற தொகுதி மறுவரையறைக்கு எதிராக போராடுவேன். "தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன்" என உறுதி ஏற்கிறேன் .

நான் வாக்காளர் பட்டியல் மோசடி மூலம் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் சிறப்பு தீவிரத் திருத்தத்திற்கு எதிராக நிற்பேன் "தமிழ்நாட்டைத் தலைகுனியே விடமாட்டேன்" என உறுதி ஏற்கிறேன்.

நான் நீட் மற்றும் இளைஞர்களை முடக்கும் எந்த ஒரு திட்டத்தையும் எதிர்த்து நிற்பேன். நம் மாணவர்களுக்கு உரிய கல்வி நிதிக்காக போராடுவேன். ஒருபோதும் "தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன்" என உறுதி ஏற்கிறேன் .

நான் தமிழ் மொழி பண்பாடு மற்றும் பெருமைக்கு (நன்மதிப்பிற்கு) எதிரான எந்தவொரு பாகுபாட்டையும் எதிர்த்துப் போராடுவேன். எதற்காகவும் "தமிழ்நாட்டைத் தலைகுனியே விடமாட்டேன்" என உறுதி ஏற்கிறேன்.

நான் பெண்கள் விவசாயிகள் மீனவர்கள் நெசவாளர்கள் தொழிலாளர்கள் என ஒவ்வொரு உழைக்கும் வர்க்கத்தின் நலன்களையும் பாதுகாக்க தேவையான நிதிக்காக போராடுவேன் "தமிழ்நாட்டைத் தலைகுனியே விடமாட்டேன்" என அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி அலுவலர்கள், பகுதி சபா உறுப்பினர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.