தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி பணியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் தூத்துக்குடி மாவட்ட தலைவர் கற்குவேல் தலைமை வகித்து துவக்கி வைத்தார். மாவட்ட செயலாளர் கருப்பசாமி, மாவட்ட பொருளாளர் சங்கரலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் கணேசன் வரவேற்று பேசினார்.
16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில பொதுச் செயலாளர் வேல்முருகன் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து மாநில செயற்குழு உறுப்பினர் இசக்கிமுத்து, மாவட்ட மகளிரணி தலைவர் லட்சுமி, ஒன்றிய தலைவர்கள் இசக்கிமுத்து சோமு, சிவபாலன், முத்துக்கண்ணன், வெள்ளத்துரை மற்றும் மக்கள் நல பணியாளர் சங்க நிர்வாகிகள் தமிழரசன், சந்தனக்குமார், நம்பி, வீரப்பன் ஆகியோர் உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஊராட்சி செயலாளர்கள், மக்கள் நல பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், மேல்நிலை நீர்தேக்க தொட்டி இயக்குநர்கள், தூய்மை காவலர்கள் உள்ளிட்ட ஊராட்சி பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தி தொடர்பாளர் பாலமுருகன் நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தினர் செய்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் 16 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி ஊராட்சி பணியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூய்மை பணியாளர்களுக்கான மருத்துவ முகாமை தொடங்கி வைத்த மேயர் ஜெகன் பெரியசாமி!!
அடுத்த
மதிமுக செயலாளர் முருகபூபதி தலைமையில் பத்ம ஶ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் மரியாதை!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026