தூத்துக்குடி, செப்டம்பர் 17 இன்று (17.09.2025) புதன்கிழமை மாலை 4.00 மணியளவில் முத்தையாபுரம் பல்க் ஜங்ஷன் அருகில் தாயக மக்கள் கட்சி சார்பில் தந்தை பெரியார் அவர்களின் 147ஆவது பிறந்தநாள் விழா சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக புரட்சி பாரதம் கட்சியின் தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளர் மா. மாரிசெல்வம், மாவட்ட துணைச் செயலாளர் ஆ. இந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மேலும், பல்வேறு இயக்கத் தோழர்கள் உற்சாகமாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.