ஆணவ படுகொலை தடுக்க சிறப்பு தனிச்சட்டம் உடனே அமல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை தாழ்மையுடன் கேட்டுக் கொள்வது சம்பந்தமாக மேலும் தேர்தல் கமிஷன் பாஜகவின் கைக்கூலியாக வேலை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மாலை தூத்துக்குடி சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகில் காங்கிரஸ் கமிட்டி சார்பில் போராட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் A. ராஜாராம் முன்னாள் எஸ்.சி எஸ்.டி பிரிவு மாவட்ட தலைவர் தலைமையில் T. ஜெயக்கொடி அகில இந்திய ஒர்க்கர்ஸ் கமிட்டி மாவட்ட தலைவர் S. தங்கராஜ் தெற்கு மண்டல தலைவர் D. இக்னேஷியஸ் மாநகர மாவட்ட பொதுச் செயலாளர், ஆகியோர் முன்னிலையில்,
 
K. பெருமாள் சாமி (தமிழ்நாடு ஐஎன்டியுசி மாநில பொதுச் செயலாளர், காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர், முன்னாள்  இளைஞர் காங்கிரஸ் தலைவர்) பாளையங்கோட்டை ஆணவ படுகொலை குறித்து கவன ஈர்ப்பு சிறப்புரையும் மத்திய அரசுக்கு துணை போகும் தேர்தல் கமிஷனை கண்டித்தும் சிறப்புரை ஆற்றினார்கள்.

இந்நிகச்சியில் வெள்ளை நிற டீசர்ட் இயக்கம் சுபத்ரா, ஒர்க்கர்ஸ் கமிட்டி மகிலா காங்கிரஸ் மாநில செயல் தலைவி ஜெயஜோதி மற்றும் அகில இந்திய காங்கிரஸ் ஒர்க்கர்ஸ் கமிட்டி மாவட்ட பொது செயலாளர் சம்சுதீன் மீனவர் அணி மிக்கேல் குரூஸ், வடக்கு மாவட்ட விவசாய பிரிவு தலைவர் பேரையா , சேகர், ஆராய்ச்சி துறை ஆடிட்டர் சிவராஜ் மோகன், ஒர்க்கர்ஸ் கமிட்டி சக்தி கணேஷ், INTUC மனோகரன், வார்டு தலைவர்கள் முருகேசன், மனுவேல், சுந்தர்ராஜ், சேவியர்மிசியர், சேக்ஸ்பியர் பாலகிருஷ்ணன், ஆனந்தராஜ், வழக்கறிஞர் செல்வம், வசந்தி, ஒர்க்கர்ஸ் கமிட்டி மகிலா காங்கிரஸ் மாவட்ட தலைவி உமா மகேஸ்வரி மாவட்ட செயலாளர் தனலட்சுமி ஆகியோர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்.

INTUC சார்ந்த சிவலிங்கம் சாரதி முத்து ரமேஷ் கிரிதரன் பாலன் உட்பட 200 க்கும் மேற்பட்ட தேசிய நெஞ்சங்கள் கலந்து கொண்டனர். ST பிரிவு மாநிலச் செயலாளர் M. முனியசாமி நன்றி உரை ஆற்றினார்.