தூத்துக்குடி காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆகஸ்ட் 6 ம் தேதி இன்று (புதன்கிழமை) மாலை 4 மணியளவில் பாளையங்கோட்டை ஆணவ படுகொலை போன்ற சம்பவங்களை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும்.

தமிழக முதல்வர் இந்த ஆணவ படுகொலை சிறப்பு சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கவன ஈர்ப்பு கூட்டம் நடைபெற்றது. கவன ஈர்ப்பு கூட்டத்திற்கு ராஜாராம் (முன்னாள் எஸ்.சி, எஸ்.டி மாவட்ட தலைவர்) தலைமை வகித்தார். T. ஜெயக்கொடி (அகில இந்திய ஒர்க்கர்ஸ் கமிட்டி மாவட்ட தலைவர்) முன்னிலை வகித்தார். தங்கராஜ் (தெற்கு மண்டல தலைவர்) இக்னேஷியஸ் (மாநகர காங்கிரஸ் பொது செயலாளர்) ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

கவன ஈர்ப்பு உரையை
K. பெருமாள் சாமி (தமிழ்நாடு மாநில ஐஎன்டியூசி பொதுச் செயலாளர், காங்கிரஸ் கட்சி மாநில பொது குழு உறுப்பினர், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர்) ஆற்றினார்.

நன்றியுரையை மாநில எஸ்.டி பிரிவு செயலாளர் முனியசாமி நிகழ்த்தினார். இந்திய தேசிய காங்கிரஸ் தூத்துக்குடி சார்பில் நடைபெற்ற கவன ஈர்ப்பு கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியை சார்ந்த மாவட்ட, மாநில நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.