தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட வடக்கு மண்டல அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமினை மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

உடன் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா இ.ஆ.ப, பகுதி கழக செயலாளரும் மண்டல தலைவருமான நிர்மல்ராஜ், மாமன்ற உறுப்பினர்கள் ரெங்கசாமி, காந்திமதி, ஜெயசீலி, கற்பககனி, தெய்வேந்திரன், அந்தோணி மார்ஷலின், நாகேஸ்வரி, ஜெபஸ்டின் சுதா மற்றும் சுப்புலட்சுமி உட்பட மாநகராட்சி துறை சார்ந்த அதிகாரிகள், பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

