கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் வல்லநாடு கஸ்பா, நாணல்காடு ஊராட்சி கிராம மக்களுக்கான "உங்களுடன் ஸ்டாலின்" சிறப்பு திட்ட முகாம் வல்லநாடு V.T.V.D  திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா கலந்து கொண்டு பொதுமக்களுக்கு முகாமில் வழங்கப்படும் சேவைகள் குறித்து கேட்டறிந்தார். மற்றும் "உங்களுடன் ஸ்டாலின்" முகாமில் மனு வழங்கிய மனுதாரர்களுக்கு மின்சார வாரியம் மற்றும் பொது விநியோக திட்ட பெயர் திருத்தம் ஆகிய ஆணைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வழங்கல் அலுவலர் உஷா வட்டார வளர்ச்சி அலுவலர் ஆறுமுகராஜா நயினார் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.