தூத்துக்குடி, செப்டம்பர் 20, 2025 –
தூய மரியன்னை கல்லூரி (தன்னாட்சி), தூத்துக்குடி சமூக மேம்பாட்டு திட்டம் (CDP) – TOUCH, உன்னத் பாரத் அபியான் மற்றும் ஆங்கிலத் துறை இணைந்து, கடல்சார் மாசுபாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை இன்று காலை 10.00 மணிக்கு CMFRI, தூத்துக்குடியில் நடத்தியது.

நிகழ்ச்சியில் ஒலிப்பார்வைக் காட்சி (AV Show) மூலம் கடல்சார் மாசுபாட்டின் காரணங்கள், விளைவுகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் விரிவாக விளக்கப்பட்டன. குறிப்பாக பிளாஸ்டிக் கழிவுகளை குறைப்பது, கடல்சார் உயிரினங்களை பாதுகாப்பது, மற்றும் கடற்கரை சூழலியலை காக்கும் அவசியம் வலியுறுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சி கல்லூரி செயலாளர் அ.செ. டாக்டர் எஸ். குலந்தை தெரசா, முதல்வர் அ.செ. டாக்டர் ஜெஸ்சி பெர்னாண்டோ, துணைமுதல்வர் அ.செ. டாக்டர் எம். எஸ். எளிலரசி மற்றும் ஆங்கிலத் துறைத் தலைவர் டாக்டர் பி. செரீனா மார்கரெட் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்றது.

சமூக மேம்பாட்டு திட்ட ஒருங்கிணைப்பாளர்களான டாக்டர் எம். ஹெர்மினா மற்றும் மெல்பா ஷேரன் ஆகியோர் நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைத்தனர். பங்கேற்ற அனைவரிடமும் இந்நிகழ்ச்சி பெரும் வரவேற்பைப் பெற்று பாராட்டைப் பெற்றது.