தூத்துக்குடியில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி பொதுமக்கள் பெரிதும் அவதிய прежvoன்றனர். குறிப்பாக, ராஜீவ் நகர் வடக்கு 6-வது தெரு பகுதியில் மழைநீர் வீடுகளில் புகுந்து மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த நிலையில், அப்பகுதியில் வசிக்கும் மூத்த வழக்கறிஞரும் பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் மாநில வழக்கறிஞர் அணி செயலாளருமான ஜெயபால், தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்திற்கு மனு அளித்து, போர் கால அடிப்படையில் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.

அவர் தனது மனுவில் குறிப்பிட்டதாவது “நான் வசிக்கும் ராஜீவ் நகர் வடக்கு 6-வது தெரு மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் முறையான வடிகால் வசதி இல்லை. பாதாள சாக்கடை திட்டத்தின் பெயரில் தெருக்களை தோண்டி சரியாக மூடாததால் தெருக்கள் மேடு பள்ளமாகி மழைநீர் தேங்குகிறது. மாநகராட்சி சுகாதார அலுவலர் வசிக்கும் தெருவில் மட்டும் சரளாக போக்குவரத்துக்கு ஏற்றவாறு சாலை சீரமைப்பு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் மற்ற வீடுகள் மழைநீரால் மூழ்கியுள்ளன. நாங்களும் மாநகராட்சிக்கு வரி செலுத்துகிறோம். பலமுறை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை,” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், மழைநீர் தேங்கி வீடுகள் பாதிக்கப்படுவதால் உடனடியாக போர் கால அடிப்படையில் தண்ணீரை வெளியேற்றி, வடிகால் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.